உலகம்

இலங்கை தொடர் குண்டுவெடிப்பு: பயங்கரவாதியின் மனைவி, சகோதரியும் பலி

DIN


இலங்கையில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பில் தற்கொலைத் தாக்குதல் நடத்திய பயங்கரவாதியின் மனைவி மற்றும் சகோதரியும் உயிரிழந்தனர். 

இலங்கையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பில் 310 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகள் என முதலில் 7 இடங்களில் குண்டுவெடித்தது. இதில், ஷாங்க்ரி-லா விடுதியில் தற்கொலைத் தாக்குதல் நடத்தியவர் இன்சான் சீலா-வான் என்று அடையாளம் காணப்பட்டார். அவர் ஒரு ஆலையின் உரிமையாளராக இருந்துள்ளார். 

இந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களை தொடர்ந்து,  போலீஸார் சோதனை நடத்தினர். இதன் பகுதியாக கொழும்பு தேமடகோடாவில் ஒரு வீட்டில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, அங்கிருந்த பயங்கரவாதி குண்டை வெடிக்கச் செய்துள்ளார். இது இலங்கையில் நிகழ்ந்த 8-ஆவது குண்டுவெடிப்பாகும். இதில், 3 போலீஸார் கொல்லப்பட்டனர். 

இந்த குண்டுவெடிப்பில் ஷாங்க்ரி-லா விடுதியில் தற்கொலைத் தாக்குதல் நடத்திய இன்சான் சீலா பயங்கரவாதியின் மனைவி மற்றும் சகோதரியும் உயிரிழந்தனர். 

இந்த தகவலை போலீஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் -பிரதமர் மோடி

குஜராத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி

இன்று யோகம் யாருக்கு?

SCROLL FOR NEXT