உலகம்

இலங்கை குண்டு வெடிப்பு சம்பவங்கள் எதிரொலி: வியாழனன்று அதிபர் சிறீசேனா தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் 

இலங்கை தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களின் எதிரொலியாக, வியாழனன்று அதிபர் சிறீசேனா தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறவுள்ளது.

DIN

கொழும்பு: இலங்கை தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களின் எதிரொலியாக, வியாழனன்று அதிபர் சிறீசேனா தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறவுள்ளது.

இலங்கை தலைநகர் கொழும்புவில் ஈஸ்டர் தினமான ஞாயிறன்று தேவாலயங்கள், தங்கும் விடுதிகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல்களில் 359 பேர் மரணமடைந்தனர். 500-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக இலங்கை போலீசார் இதுவரை 58 பேரைக் கைது செய்துள்ளனர். 18 பேரிடம் விசாரணை நடந்து வருகிறது.  மேலும் தேடுதல் வேட்டை தீவிரமாக நடந்து வருகிறது

இந்நிலையில் இலங்கை தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களின் எதிரொலியாக, வியாழனன்று அதிபர் சிறீசேனா தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறவுள்ளது.

அதிபர் மைத்ரிபால சிறீசேனா தலைமையில் வியாழன் காலை 10 மணிக்கு அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது. இதில் அனைத்து கட்சி நிர்வாகிகள், மற்றும் தலைவர்களுடன் அதிபர் ஆலோசனை நடத்த உள்ளார். 

அதனைத் தொடர்ந்து மாலை 4 மணிக்கு அதிபர்  தலைமையில் சர்வ சமய கூட்டம் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செவ்வானம்... திவ்ய பாரதி!

மேகம்... ரித்திகா நாயக்!

திஷா பதானியின் வீட்டிற்கு வெளியே துப்பாக்கிச் சூடு! குற்றவாளிகள் சுட்டுக்கொலை!

அமெரிக்க வரி விதிப்பால் ஆட்டோமொபைல் உதிரிபாக உற்பத்தி 8% பாதிப்பு!

பில் சால்ட் அதிரடி: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இங்கிலாந்து!

SCROLL FOR NEXT