உலகம்

புதினைச் சந்திக்க ரஷ்யா வந்தடைந்தார் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் 

IANS

மாஸ்கோ: அதிபர் புதினை முதல்முறையாகச் சந்திக்க வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் புதன் மதியம் ரஷ்யா வந்தடைந்தார்

தனது பிரத்யேக பச்சை நிற ரயில் வண்டியில் ரஷ்யாவின் கிழக்குப் பகுதியில் உள்ள விளாடிவோஸ்டாக் நகர ரயில் நிலையத்திற்கு புதன்கிழமை மதியம் அவர் வந்தடைந்தார். அங்கு அவரை ரஷ்ய உயர் அதிகாரிகள் வரவேற்றனர்.

அங்கிருந்தபடியே ரஷ்யத் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:

ரஷ்ய மக்களின் உற்சாகமான வவேற்புடன் நான் இங்கு வந்து சேர்த்துள்ளேன், முன்பே கூறியது போல எனது இந்தப் பயணமானது வெற்றிகரமாகவும் பயனளிக்கும் விதமாகவும் அமையும் என்று கருதுகிறேன்.      

கொரிய தீபகற்பத்தில் நிலவும் பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் விதமாகவும், இரு நாட்டு உறவுகளை மேம்படுத்தும் விதமாகவும் நான் மரியாதைக்குரிய ரஷ்ய அதிபர் புதினுடன் பேச உள்ளேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.   

அணு ஆயுத சோதனைகளை கைவிடுவது தொடர்பாக வட கொரியாவுக்கும் அமெரிக்காவுக்கும்  நடைபெற்று வந்த பேச்சுவார்த்தைகள் தடைபட்டுள்ள நிலையில், கிம் ஜாங் உன்னின் ரஷ்யப் பயணம் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

10இல் 9 முறை டாஸ் தோல்வி: ருதுராஜ் கலகலப்பான பதில்!

‘ஒரு காபி சாப்பிடலாம், வா!’

மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு இடம் பெயர்ந்தார் குருபகவான்!

"அவமானத்துக்குரிய மௌனத்தையே மோடி கடைபிடிக்கிறார்": ராகுல் | செய்திகள்: சிலவரிகளில் | 01.05.2024

மறுபடியும் டாஸ் தோல்வி: சிஎஸ்கே பேட்டிங்; அணியில் 2 மாற்றங்கள்!

SCROLL FOR NEXT