உலகம்

இந்தியத் தூதரை திரும்ப அழைத்துக்கொள்ளுங்கள்: பாகிஸ்தான்

ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு நீக்கியதையடுத்து, பாகிஸ்தானுக்கான இந்தியத் தூதரை திரும்ப அழைத்துக்கொள்ளுமாறு அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

DIN


ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு நீக்கியதையடுத்து, பாகிஸ்தானுக்கான இந்தியத் தூதரை திரும்ப அழைத்துக்கொள்ளுமாறு அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 370-ன் கீழ் ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு நீக்கியது. மேலும், ஜம்மு காஷ்மீரை சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாகவும், லடாக்கை சட்டப்பேரவை அல்லாத யூனியன் பிரதேசமாகவும் மாற்றியது. இதுதொடர்பான இரு மசோதாக்களும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளில் நிறைவேற்றப்பட்டது.

இந்த நிலையில், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் தலைமையில் தேசிய பாதுகாப்புக் குழு கூட்டம் இன்று (புதன்கிழமை) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. 

அதில், பாகிஸ்தானுக்கான இந்தியத் தூதர் அஜய் பிசாரியாவை திரும்ப அழைத்துக்கொள்ளுமாறு அந்நாடு இந்தியாவை கேட்டுக்கொண்டுள்ளது. மேலும், ஆகஸ்ட் 16-இல் அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்கவுள்ள இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் மொயின்-உல்-ஹக்கையும் இந்தியாவுக்கு அனுப்பப்போவதில்லை என்பதையும் அந்நாடு இந்தியாவிடம் தகவல் தெரிவித்துள்ளது. மொயின்-உல்-ஹக் தற்போது பாகிஸ்தானில் உள்ளார்.

முன்னதாக, ஏஎஃப்பி செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவலில், பாகிஸ்தானுக்கான இந்தியத் தூதரை திருப்பி அனுப்பவும், அத்துடன் மிக முக்கியமாக இந்தியாவுடனான வர்த்தக உறவைத் துண்டித்துக்கொள்ளவும் பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாமகவில் போட்டி பொதுக்குழு: ராமதாஸ், அன்புமணி அறிவிப்பு

மாணவா்களை இளம் விஞ்ஞானிகளாக்க பள்ளி ஆசிரியா்களுக்கு பயிற்சி

இணையவழி சூதாட்டம்: மாநிலங்கள் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

இன்றைய மின்தடை: விழுப்புரம் நகரம்!

பைக்கிலிருந்து தவறி விழுந்த இளம்பெண் உயிரிழப்பு

SCROLL FOR NEXT