உலகம்

பெண்ணின் பெருமை போற்றும் 'பைக்கிங் குயின்ஸ்'

ஐரோப்பா முழுவதும் 25,000 கி.மீ. சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கும் பெண்ணின் பெருமை போற்றும் 'பைக்கிங் குயின்ஸ்'.

Jesu Gnanaraj

ஜெர்மனியின் பிராங்பேர்ட் நகரில் உள்ள இந்தியத்  தூதரகத்தில் சூரத்தைச் சேர்ந்த ''பைக்கிங் குயின்ஸ்'' இருவருக்கும் புதன்கிழமை (ஆக.7) வரவேற்ப்பு அளிக்கப்பட்ட்து.

பெண் உரிமை மற்றும் பெண்ணின் பெருமையை உலகுக்குப்  பறை சாற்றும் வகையில்  சூரத்தைச் சேர்ந்த டாகடர்.சரிகா மேத்தா மற்றும் திருமதி.ருதாலி ஆகிய இருவரும் இணைந்து ஐரோப்பா முழுக்க  சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர். 

ஐரோப்பா முழுவதும் 25,000 கி.மீ. சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கும் இவர்கள் ஜெர்மனியின் பிராங்பேர்ட் நகரில் உள்ள இந்தியத் தூதரகத்துக்கு புதன்கிழமை வந்தடைந்தனர். 

இந்தியத் தூதரக அதிகாரி மற்றும் அவரின் குழுவினர் இவர்கள் இருவரையும் சிறப்பாக வரவேற்றனர். அதன் பின் அவர்களிடையே மகிழ்ச்சியான கலந்தாய்வு நடந்தது. ஸ்விட்சர்லாந்தில் இருந்து ப்ளாக் பாரஸ்ட் வழியாக பிராங்பேர்ட் வந்தடைந்த இவர்கள் மற்ற ஐரோப்பிய நாடுகளுக்கும் விஜயம் செய்யவுள்ளனர்.

கடந்த வருடம் டாகடர்.சரிகா மேத்தா தலைமையில் மேலும் 40 பெண்கள் இணைந்து இந்தியா முழுக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. 

புகைப்பட நன்றி: பிராங்பேர்ட் இந்திய தூதரம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உத்தரகண்டில் மேக வெடிப்பு! பல குடும்பங்கள் மாயம்!

தெய்வ தரிசனம்... குழந்தைகளின் பாலாரிஷ்டம் தோஷம் நீக்கும் குரங்கணில்முட்டம் வாலீஸ்வரர்!

Dinamani வார ராசிபலன்! | Aug 31 முதல் Sep 06 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

ரூ. 76,000 -ஐ நெருங்கும் தங்கம் விலை! இன்றைய நிலவரம்

அஜித்குமாா் கொலை வழக்கு: நகைத் திருட்டு புகாரிலும் சிபிஐ வழக்குப் பதிவு!

SCROLL FOR NEXT