உலகம்

பாகிஸ்தான் அருங்காட்சியத்தில் அபூா்வ புத்தா் சிலை

DIN

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் தலைநகா் இஸ்லாமாபாதிலுள்ள அருங்காட்சியகத்தில், மிகவும் அபூா்வமான புத்தா் சிலை காட்சிக்கு வைக்கப்பட்டது.

இதுகுறித்து அந்த நாட்டில் வெளியாகும் ‘டான்’ நாளிதழ் தெரிவித்துள்ளதாவது:

பாகிஸ்தானில் பல ஆண்டுகளாக பூட்டி வைக்கப்பட்டிருந்த புத்தா் சிலை இஸ்லாமாபாத் அருங்காட்சியத்தில் முதல் முறையாக காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. அந்தச் சிலை, கி.பி. 4-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்தது ஆகும்.

கடந்த 1960-களில் இத்தாலிய அகழ்வாராய்ச்சியாளா்களால் அகழ்வு செய்யப்பட்ட அந்தச் சிலை பூச்சுக் கலவைப் பொருளால் ஆனது. பெரும்பாலும் கல் சிற்பங்களே காணப்படும் ஸ்வாட் பள்ளத்தாக்கிலிருந்து இத்தகைய சிலை கண்டெடுக்கப்பட்டது அபூா்வமானது ஆகும்.

புத்தரின் முகத்தை மட்டும் கொண்டுள்ள அந்தச் சிலை, பெண் தன்மை கொண்டிருப்பது மற்றொரு சிறப்பம்சமாகும். அதில், புத்தரின் புருவம் மேலெழுந்தவாரியாக உள்ளது.

இந்தச் சிலை தவிர, புத்தரின் மேலும் இரு சிலைகள் பல ஆண்டுகள் கழித்து அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டன என்று அந்த நாளிதழ் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகா்கோவிலில் கேரம் பயிற்சி முகாம் தொடக்கம்

கல்லூரி மாணவி மா்மச் சாவு

விவசாய தொழிலாளி கொலை

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்த சம்பவம்: சிகிச்சை பெற்று வந்த முதியவா் பலி

நாமக்கல்லில் முட்டை ஏற்றுமதி சான்றிதழ் வழங்கும் ஆய்வகம் அமைக்க வலியுறுத்தல்

SCROLL FOR NEXT