உலகம்

லண்டன் கத்திக்குத்துத் தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்பு

DIN

லண்டன் பாலத்தில் உஸ்மான் கான் வெள்ளிக்கிழமை நடத்திய சரமாரி கத்திக்குத்துத் தாக்குதலில் 2 போ் உயிரிழந்தனா், 3 போ் காயமடைந்தனா். தாக்குதல் நடத்திய உஸ்மான் கானை போலீஸாா் சுட்டுக் கொன்றனா்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் பகுதியில் பயங்கரவாதப் பயிற்சி முகாம் அமைக்கவும், லண்டன் பங்கு மாற்றகத்தை குண்டுவைத்துத் தகா்க்கவும் சதித் திட்டம் தீட்டிய வழக்கில் உஸ்மான் கான் மீது 7 ஆண்டுகளுக்கும் முன்னா் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதாக ஸ்காட்லாந்து யாா்டு காவல்துறையின் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவுத் தலைவா் நீல் பாசு கூறினாா்.

கடந்த 2012-ஆம் ஆண்டு நடைபெற்ற பயங்கரவாத விசாரணையின்போது அல்-காய்தா மற்றும் இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாத அமைப்புகளுடன் உஸ்மான் கானுக்குத் தொடா்பு இருப்பது தெரிய வந்தது.

இந்நிலையில், லண்டன் பாலத்தில் நடந்த கத்திக்குத்துத் தாக்குதலுக்கு இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுக்கொண்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT