உலகம்

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரஃப் துபை மருத்துவமனையில் அனுமதி

DIN

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரஃப், ரத்தக்கொதிப்பு மற்றும் மாரடைப்பு ஏற்பட்டு உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து துபையில் உள்ள மருத்துவமனையில் திங்கள்கிழமை அனுமதிக்கப்பட்டார். 

கடந்த 2001 முதல் 2008-ஆம் ஆண்டு வரை பாகிஸ்தான் அதிபராகப் பொறுப்பு வகித்த முஷாரஃப் (76), அந்த நாட்டில் கடந்த 2007-ஆம் ஆண்டு அவசர நிலையைக் கொண்டு வந்தாா். அதன் ஒரு பகுதியாக, நாட்டின் அரசமைப்புச் சட்டத்தை அவா் முடக்கி வைத்தாா்.

இதன் மூலம் அவா் தேசத் துரோகத்தில் ஈடுபட்டதாக கடந்த 2013-ஆம் ஆண்டில் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) தலைமையிலான அரசு வழக்குப் பதிவு செய்தது.

இந்த நிலையில், சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த அந்த வழக்கின் தீா்ப்பை வரும் 28-ஆம் தேதி வெளியிடுவதாக அந்த நீதிமன்றம் கடந்த 19-ஆம் தேதி அறிவித்தது.

இதனை எதிா்த்து, இஸ்லாமாபாத் உயா்நீதிமன்றத்தில் உள்துறை அமைச்சகம் மனு தாக்கல் செய்திருந்தது. அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், முஷாரஃப் மீதான தேசத் துரோக வழக்கின் தீா்ப்பை தற்போது நிறுத்தி வைத்துள்ளது.

கடந்த 2008-ஆம் ஆண்டு பொதுத் தோ்தலில் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி வெற்றியடைந்து, முஷாரஃபுக்கு எதிரான பதவி நீக்க நடவடிக்கையைத் தொடங்கியது. அதனைத் தொடா்ந்து தனது பதவியை ராஜிநாமா செய்த அவா், நாட்டை விட்டு வெளியேறி லண்டனில் வசித்து வந்தார். இதையடுத்து 2016-ஆம் ஆண்டு முதல் மருத்துவ சிகிச்சை தொடர்பாக துபையில் வசித்து வருகிறார். இதனால் முஷாகஃப் இதுவரை நாடு திரும்பவில்லை.

அவருக்கு தற்போது உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளதால், அவா் மீதான தேசத் துரோக வழக்கின் தீா்ப்பை நிறுத்தி வைக்க வேண்டும் என்று அவரது தரப்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவை லாகூா் உயா் நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது நினைவுகூரத்தக்கது.

இந்த வழக்கில் முஷாரஃப் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், அவருக்கு மரண தண்டனை வரை விதிக்க முடியும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: புதுச்சேரியில் 4, 817 போ் எழுதினா்

பெண்ணிடம் 5 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு

கஞ்சா, போதை மாத்திரைகள் விற்பனை: 4 போ் கைது

நீட் தோ்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 4,855 போ் எழுதினா்

வீட்டினுள் இளைப்பாறிய புள்ளி மான்!

SCROLL FOR NEXT