உலகம்

அமெரிக்காவின் தீய நோக்கம் தோல்வியுற்றே தீரும்!

DIN


சீனாவின் எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல், அண்மையில், அமெரிக்கா, ஹாங்காங் மனித உரிமை மற்றும் ஜனநாயக சட்ட முன்வரைவைச் சட்டமாக மாற்றியது. இது, ஹாங்காங் அமைதி மற்றும் வளர்ச்சியைப் பாதித்து, அதன் சொந்த வளர்ச்சியையும் சர்வதேச சமூக நலனையும் சீர்குலைக்கும் செயலாகும். 

அமெரிக்கா எத்தகு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் தேசிய அரசுரிமை, பாதுகாப்பு, வளர்ச்சி நலன் ஆகியவற்றைப் பேணிக்காப்பதில் சீன அரசு மற்றும் மக்களின் மனவுறுதி மாறாது. ஹாங்காங் வளர்ச்சியையும், சீன நாட்டின் மாபெரும் மறுமலர்ச்சியையும் சீர்குலைக்க முயலும் அமெரிக்காவின் தீய நோக்கம் தோல்வியுற்றே தீரும்.

அமெரிக்காவின் இந்த நடவடிக்கை, ஹாங்காங் வன்முறை நடவடிக்கைகளை மேலும் தீவிரமடையச் செய்து, சட்டத்தையும் சமூக ஒழுங்கையும், ஹாங்காங் வளர்ச்சியையும் கடுமையாகச் சீர்குலைத்து, “ஒரு நாட்டில் 2 அமைப்பு முறைகள்” என்ற கொள்கைக்கு அறைகூவல் விடுத்துள்ளது.

அதோடு, வன்முறையாளர்களுக்கு ஆதரவு அளிக்கும் இந்நடவடிக்கையால், ஹாங்காங் நகரவாசிகள் உள்ளிட்ட 140 கோடி சீன மக்களின் கடுமையான எதிர்ப்பை அமெரிக்கா பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

தகவல்:சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொறியியல் கலந்தாய்வு: 1,73,792-ஐ கடந்த விண்ணப்பங்கள்

இந்த வாரம் கலாரசிகன் - 19-05-2024

வேனிலிலும் குளிர்ச்சி

தனித்து உண்ணாத் தன்மையாளன்

பூவினுள் மணம் போல் அகத்திணை மரபு!

SCROLL FOR NEXT