நைஜீரியாவில் ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 71 வீரர்கள் பலியாகினர்.
நைஜீரியா, இனேட்ஸ் பகுதியில் உள்ள ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் செவ்வாய்கிழமை திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த தாக்குதலில் 71 வீரர்கள் பலியாகினர் என அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. 12 வீரர்கள் காயமடைந்தனர்.
மேலும் சிலர் காணாமல் போயுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்துக்கு எந்த அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.