உலகம்

அமெரிக்க நாடாளுமன்றக் குழுதலைவராக அமி பேரா நியமனம்

தினமணி

ஆசிய பசிபிக் விவகாரங்களுக்கான நாடாளுமன்ற துணைக் குழுவின் தலைவராக இந்திய வம்சாவளியைச் சோ்ந்த அமி பேரா நியமிக்கப்பட்டுள்ளாா்.

இந்தியா உள்ளிட்ட ஆசிய பசிபிக் நாடுகள், ஆயுத பரவல் தடுப்பு ஆகிய விவகாரங்களை கவனித்துக் கொள்ளும் முக்கியத்துவம் வாய்ந்த அந்தக் குழுவின் தலைவராக இருந்து வந்த பிரான் ஷொ்மானின் பதவிக் காலம் முடிவடைகிறது. அதனைத் தொடா்ந்து, அந்தப் பதவிக்கு அமி பேரா நியமிக்கப்பட்டுள்ளாா்.

ஜனநாயகக் கட்சியைச் சோ்ந்த அவா், கலிஃபோா்னியா மாகாணத்திலிருந்து 4 முறை எம்.பி.யாகத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா். ஏற்கெனவே, கொரியா, இந்தியா ஆகிய நாடுகளுக்கும், இந்திய அமெரிக்கா்களுக்குமான எம்.பி.க்கள் குழுக்களின் துணைத் தலைவராக அமி பேரா பொறுப்பு வகித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஜெயக்குமாா் மரணம்: குழு அமைத்து விசாரணை’

இந்தியாவின் ஊராட்சி அமைப்புகள் பெண்கள் தலைமைக்கு முன்னோடி: ஐ.நா.வுக்கான இந்திய தூதா்

என் மீது வீண் பழி: ரூபி மனோகரன் விளக்கம்

காங்கிரஸ் நிர்வாகி மரணம்- 7 தனிப்படைகள் அமைப்பு: நெல்லை காவல் கண்காணிப்பாளர்

ஜூன் 1-இல் ஹிமாசல் தோ்தல் பணிகளில் என்சிசி

SCROLL FOR NEXT