உலகம்

மக்கௌ தாய் நாட்டுடன் இணைந்த 20-ஆவது ஆண்டு நிறைவுக் கொண்டாட்டம்

ஹெயீசெங், மக்கௌ சிறப்பு நிர்வாகப் பிரதேசத்தின் தலைமை அதிகாரியாக உறுதிமொழி கூறி பதவியேற்றுக் கொண்டார்.

DIN

மக்கௌ தாய் நாட்டுடன் இணைந்த 20-ஆவது ஆண்டு நிறைவுக் கொண்டாட்டம் மற்றும் மக்கௌ சிறப்பு நிர்வாகப் பிரதேசத்தின் 5-ஆவது அரசின் பதவி ஏற்பு விழா, டிசம்பர் 20-ஆம் நாள் முற்பகல் மக்கௌவில் நடைபெற்றது. சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் இதில் பங்கேற்று முக்கிய உரை நிகழ்த்தினார்.

ஹெயீசெங், மக்கௌ சிறப்பு நிர்வாகப் பிரதேசத்தின் தலைமை அதிகாரியாக உறுதிமொழி கூறி பதவியேற்றுக் கொண்டார்.

அப்போது, ஷிச்சின்பிங் பேசுகையில்,

ஒருநாட்டில் இரண்டு அமைப்பு முறைகள் என்ற கொள்கையை எப்போதும் உறுதியாகக் கடைப்பிடிப்பதே, மக்கௌ வெற்றியின் ரகசியம் ஆகும்.

மக்கௌ சிறப்பு நிர்வாகப் பிரதேசத்தின் புதிய அரசு மற்று சமூகத்தின் பல்வேறு துறைகள் இணைந்து, ஆட்சிபுரியும் நிலையை மேம்படுத்தி, பொருளாதாரத்தின் நிலையான மற்றும் சீரான வளர்ச்சியை முன்னெடுத்து, மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தி, சமூக இணக்கம் மற்றும் நிலைப்புத்தன்மையை மேம்படுத்தி, மக்கௌவின் வளர்ச்சியை புதிய கட்டத்துக்கு முன்னேற்றிச் செல்ல வேண்டும் என்று ஷிச்சின்பிங் விருப்பம் தெரிவித்தார்.

ஹாங்காங் மற்றும் மக்கௌ தாய் நாட்டுடன் இணைந்த பிறகு, இரண்டு சிறப்பு நிர்வாகப் பிரதேசங்களின் விவகாரங்களைக் கையாள்வது முற்றிலும் சீனாவின் உள்ளாட்சியாகும். எந்த வெளிப்புறச் சக்தியும் இவற்றில் தலையிடக் கூடாது என்றும் ஷிச்சின்பிங் வலியுறுத்தினார்.
 
தகவல்: சீன ஊடகக் குழுமம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருவள்ளூரில் பரவலாக மழை

தேனீக்கள் கொட்டியதில் 20-க்கும் மேற்பட்டோா் காயம்

’வன்னியா் சங்க கட்டடம் இப்போதுள்ள நிலையே தொடரலாம்’: உச்சநீதிமன்றம் உத்தரவு

பூட்டிய வீட்டில் நகைகள், வெள்ளிப் பொருள்கள் திருட்டு

அரசுப் பேருந்து சேதம்: இளைஞா் கைது

SCROLL FOR NEXT