உலகம்

இரு அமைப்பு முறைகளை வெற்றிபெறச் செய்து முன்னேற்றுவதில் சீனாவுக்கு ஞானம் உண்டு

டிசம்பர் 20-ஆம் நாள் நடைபெற்ற தாய்நாட்டுடன் மக்கௌ இணைந்த 20-ஆவது ஆண்டு நிறைவு மாநாடு மற்றும் மக்கௌ சிறப்பு நிர்வாகப் பிரதேசத்தின் 5-ஆவது அரசின் பதவியேற்பு விழாவில் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் உரை.

DIN

டிசம்பர் 20-ஆம் நாள் நடைபெற்ற தாய்நாட்டுடன் மக்கௌ இணைந்த 20-ஆவது ஆண்டு நிறைவு மாநாடு மற்றும் மக்கௌ சிறப்பு நிர்வாகப் பிரதேசத்தின் 5-ஆவது அரசின் பதவியேற்பு விழாவில் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் உரை நிகழ்த்துகையில், ஒருநாட்டில் இரண்டு அமைப்பு முறைகள் என்ற கொள்கையைச் செயல்படுத்துவதில் மக்கௌ பெற்றுள்ள செழிப்பான சாதனைகளை மீளாய்வு செய்து, மக்கௌவின் வெற்றிகரமான நடைமுறையாக்கத்திலுள்ள 4 முக்கிய அனுபவங்களைத் தொகுத்து வழங்கினார். 

மக்கௌ தாய் நாட்டுடன் இணைந்த 20 ஆண்டுகளாக, அரசியல் அமைப்புச் சட்டம் மற்றும் மக்கௌவின் அடிப்படை சட்டத்தை அடித்தளமாகக்கொண்ட ஆட்சி ஒழுங்கை உறுதியுடன் நிலைநாட்டியுள்ளது.

அதன் பொருளாதாரம் பெரும் வளர்ச்சி அடைந்து வருவதோடு, சமூக அமைதியும் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. மக்கௌவின் வரலாற்றில் மிகச்சிறந்த வளர்ச்சி நிலை உருவாக்கப்பட்டுள்ளது என்று ஷிச்சின்பிங் தனது உரையில் தெரிவித்தார்.

30 ஆண்டுகளுக்கு மேலான முயற்சிகளோடு, சீனா போதிய அனுபவங்களைச் சேமித்து, வலுவான நம்பிக்கையைக் கொண்டு, பெரிய ஆற்றலைத் திரட்டியுள்ளது.

ஒருநாட்டில் இரண்டு அமைப்புமுறைகள் என்ற கொள்கையை செவ்வனே நடைமுறைப்படுத்தி, இந்த அமைப்பு முறையை மேலும் முழுமைப்படுத்தி, சிறப்பு நிர்வாகப்பிரதேசங்களை மேலும் சிறப்பாக நிர்வகிப்பதில் சீனாவுக்கு ஞானமும் திறமையும் உண்டு.

தகவல்: சீன ஊடகக் குழுமம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில்.. 8 வங்கதேசத்தினர் உள்பட 22 வெளிநாட்டவர் வெளியேற்றம்!

ரஷியாவுடன் வர்த்தகம்! இந்தியாவின் கேள்விக்கு டிரம்ப்பின் மழுப்பல் பதில்!

ரூ. 22,000 தள்ளுபடியில் கூகுள் பிக்சல் 9 ஸ்மார்ட்போன்! எங்கு, எப்படி பெறலாம்?

நீதிமன்ற அவமதிப்பு: பிரியங்கா காந்தி மீது வழக்கு தொடுப்போம்! - பாஜக

2025ல் ஹூண்டாய் க்ரெட்டா: விற்பனையில் முன்னணி!

SCROLL FOR NEXT