உலகம்

போரால் ஆண்டுக்கு 1 லட்சம் குழந்தைகள் பலி

DIN


போரால் ஆண்டுக்கு 1 லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழக்கின்றனர் என்று சேவ் தி சில்ரன் என்ற சர்வதேச அமைப்பு தெரிவித்தது.
இதுதொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரை 10 நாடுகளில் நடைபெற்ற போரின் காரணமாக 5,50,000 கைக்குழந்தைகள் உயிரிழந்தனர். சண்டையின்போது மட்டுமின்றி, போருக்கு பிறகு ஏற்பட்ட பஞ்சம், மருத்துவம் கிடைக்காதது, சுகாதாரமின்மை உள்ளிட்ட பல காரணங்களால் குழந்தைகள் உயிரிழந்தனர். சிறுமிகளை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த சம்பவங்களும் போர் பகுதியில் நடைபெற்றிருக்கின்றன.
போர் காரணமாக குழந்தைகள் உயிரிழப்பதும், கை, கால் உள்ளிட்ட உடல் உறுப்புகளை இழப்பதும் நடந்து வருகிற நிலையில், ஆயுதங்களின் பயன்பாடு மும்மடங்கு அதிகரித்து வருகிறது.
கடந்த 2017ஆம் ஆண்டில் போர் பகுதியில் 42 கோடி குழந்தைகள் வசித்து வருகின்றனர். ஆப்கானிஸ்தான், மத்திய ஆப்பிரிக்க குடியரசு, காங்கோ, இராக், மாலி, சோமாலியா, தெற்கு சூடான், சிரியா, யேமன் ஆகிய நாடுகள் போரால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நாடுகள் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

SCROLL FOR NEXT