உலகம்

பிரிட்டன் தொழிலாளர் கட்சியிலிருந்து 7 எம்.பி.க்கள் விலகல்

DIN


பிரெக்ஸிட் விவகாரத்தில், பிரிட்டனிலுள்ள முக்கிய எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியிலிருந்து 7 எம்.பி.க்கள் விலகியுள்ளனர்.
லண்டனில் எம்.பி.க்கள் ஆன் கோஃபி, ஏஞ்சலா ஸ்மித், கிறிஸ் லெஸ்லி, சுக்கா உமுன்னா, மைக் கேப்பிஸ், லூசியானா பெர்ஜர், கேவின் ஷுக்கர் ஆகிய 7 பேர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:
பிரெக்ஸிட் மற்றும் யூதர்களுக்கு எதிரான பாகுபாடு ஆகிய விவகாரங்களில், தொழிலாளர் கட்சித் தலைவர் ஜெரிமி கோர்பின் கடைப்பிடித்து வரும் அணுகுமுறைகளில் எங்களுக்கு உடன்பாடில்லை. ஆதலால் தொழிலாளர் கட்சியிலிருந்து விலகும் முடிவை எடுத்தோம்.
இன்று காலை கட்சியிலிருந்து 7 பேரும் விலகி விட்டோம். இந்த முடிவு, மிகவும் கடினமாகவும், வருத்தமளிப்பதாகவும், அதே நேரத்தில் தவிர்க்க முடியாததாகவும் இருந்தது. நாடாளுமன்றத்தில் இனிமேல் நாங்கள் 7 பேரும் தனி அணியாக செயல்படுவோம் என்று தெரிவித்தனர்.
தொழிலாளர் கட்சியில் இருந்து மூத்த தலைவர்கள் 4 பேர் கடந்த 1981-ஆம் ஆண்டில் விலகி, ஜனநாயகக் கட்சி எனும் புதிய கட்சியை ஆரம்பித்தனர். 
அதன் பிறகு, தொழிலாளர் கட்சியில் ஏற்பட்ட மிகப்பெரிய பிளவாக இப்போதைய விலகல் கருதப்படுகிறது. தற்போதைய அரசியல் சூழலில் தொழிலாளர் கட்சிக்கும் இது பெரும் பின்னடைவாக கூறப்படுகிறது.
ஐரோப்பிய யூனியன் அமைப்பிலிருந்து பிரிட்டன் விலகுவதற்கு மார்ச் மாதம் 29ஆம் தேதி காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், பிரெக்ஸிட் தொடர்பாக பொது மக்களிடம் 2-ஆவது முறையாக வாக்கெடுப்பு நடத்துவது தொடர்பான பிரசாரத்துக்கு தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த ஏராளமான எம்.பி.க்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவால் கைதுக்கு சதிதான் காரணம் என ஒப்புக்கொண்ட அமித் ஷா: அதிஷி

குரங்கு பெடல் டிரெய்லர்

ஆதிதிருவரங்கத்தின் அதிசயங்கள்...

ஓடிடி ரிலீஸ்.......இந்த வார திரைப்படங்கள்!

இளஞ்சிவப்பில் தொலையும் மனம்..!

SCROLL FOR NEXT