உலகம்

வங்கதேசத்தில் இரசாயன குடோனில் பயங்கர தீவிபத்து: 69 பேர் பலி

DIN

வங்கதேசத்தில் இரசாயன குடோனில் ஏற்பட்ட தீவிபத்தில் 69 பேர் உயிரிழந்தனர். 

வங்கதேச தலைநகர் டாக்கா பகுதியில் உள்ள அடுக்குமாடி கட்டடத்தின் ஒரு பகுதி இரசாயன குடோனாக பயன்படுத்தப்பட்டு வந்தது. இங்கு நேற்று திடீரென பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. 

தகவல் அறிந்து வந்த தீயணைப்புதுறையினர் தீயை கட்டுக்குள் கொண்டுவர முயற்சித்து வருகின்றனர். தீவிபத்தில் சிக்கி இதுவரை 69 பேர் உயிரிழந்துள்ளனர். 45க்கும் அதிகமானோர் காயமுற்ற நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். 

அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என கூறப்படுகிறது. கேஸ் சிலிண்டரில் இருந்து கசிந்த கேஸ், ரசாயன பொருட்கள் மீது பட்டதே தீ விபத்து ஏற்பட காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீவிபத்து காரணமாக அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.  
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

120 லிட்டா் கள்ளச்சாராயம் பறிமுதல்: இளைஞா் கைது

மணல் கடத்தல்: இளைஞா் கைது

காா் மீது பேருந்து மோதல்: தம்பதி உயிரிழப்பு

சாலை விபத்தில் இறந்தவா் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கக் கோரி சாலை மறியல்

துணை கருவூல அலுவலகத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா்

SCROLL FOR NEXT