உலகம்

ஜல்லிக்கட்டுக்கு தடை கோரிய பீட்டா: அமெரிக்க காளை திருவிழாவுக்கு வரவேற்பு

DIN

ஜல்லிக்கட்டு போன்ற பாரம்பரிய கலாச்சார விழாக்களில் காளைகள் துன்புறுத்தப்படுவதாகக் கூறிய பீட்டா அமைப்பு அமெரிக்காவில் நடைபெறவுள்ள காளை திருவிழாவுக்கு வரவேற்பு அளித்துள்ளது.

அமெரிக்காவில் வெள்ளிக்கிழமை தொடங்கி 3 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில், காளைகளின் மீது அமரும் வீரர்கள் அதனை அடக்கி தங்கள் பலத்தை நிரூபிப்பார்கள்.

மேடீஸன் ஸ்குயர் கார்டனில் நடைபெறும் இந்த நிகழ்வுக்கு அமெரிக்காவின் பிரபல நிறுவனங்கள் விளம்பரதாரர்களாக உள்ளன. மேலும் அமெரிக்க அரசின் எல்லைப் பாதுகாப்பு அமைப்பும் இதனை இணைத்து நடத்துகிறது.

இதுகுறித்து பீட்டா அமைப்பின் அமெரிக்கத் தலைவர் இங்ரிட் நேவ்க்ரிக் கூறுகையில், இதுபோன்ற நிகழ்வுகள் தொழில்முறை காளை அடக்கும் வீரர்களைக் கொண்டு நடைபெறுகிறது.

இது தற்போதைய நாகரீக உலகில் மிக அரிதாக உள்ளது. பீட்டா இந்தியாவும், பீட்டா அமெரிக்காவும் வெவ்வேறு அமைப்பாகும் என்றார். ஆனால், ஜல்லிக்கட்டு போன்று இதற்கு ஏன் தடை கோரவில்லை என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்க மறுத்துவிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மழை வேண்டி சிறப்புத் தொழுகை

துணை மின் நிலையத்தில் தீப்பற்றி எரிந்த இரு மின் மாற்றிகள்: 6 மணி நேர மின் தடையால் மக்கள் கடும் அவதி

காஷ்மீரில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரம்: இந்திய விமானப் படையினர் மீதான தாக்குதல் எதிரொலி

ரேபரேலியில் ராகுல் காந்தி: தீதும் நன்றும்...

இருசக்கர வாகனம் பழுது பாா்க்கும் தொழிலாளா் சங்க ஆண்டு விழா

SCROLL FOR NEXT