உலகம்

அமெரிக்க அதிபர் டிரம்ப் - பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு

DIN


வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் - பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசியில் இருநாட்டு வர்த்தகம் மற்றும் ஆர்கானிஸ்தான் வர்த்தகம் மேம்பாடு தொடர்பாக ஆலோசனை நடத்தியதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. 

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் - பிரதமர் நரேந்திர மோடி ஆகிய இரு நாட்டு தலைவர்களும் இன்று தொலைபேசி வாயிலாக ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையின் போது, இந்தியாவுடனான அமெரிக்க வர்த்தக உறவுகள், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீதான வரியை குறைப்பது குறித்தும், இந்திய பசுபிக் பிராந்தியத்தில் இரு நாடுகளும் இணைந்து வர்த்தகத்தை அதிகரிப்பது, பாதுகாப்பை பலப்படுத்துவது, பயங்கரவாதம் மற்றும் உலகளாவிய பிரச்னைகள், ஒருங்கிணைப்பு உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசித்தனர். 

மேலும், புத்தாண்டு வாழ்த்துக்களையும் பகிர்ந்து கொண்ட இரு நாட்டு தலைவர்களும், 2019-இல் இரு நாட்டு தலைவர்களும் இணைந்து பணியாற்றி இரு நாடுகளுக்கு இடையேயான உறவை பலப்படுத்து குறித்து பேசப்பட்டதாக வெள்ளை மாளிகை செய்தி குறிப்பில் தெரிவித்தப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொடைக்கானலில் 61 வது மலர் கண்காட்சி,கோடை விழா தொடங்கியது

கேப்டன்சியில் அசத்தும் பாட் கம்மின்ஸ்!

பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம் அண்ணியா இது!

’இஸ்லாமியம்’ வார்த்தையை நீக்கிய தூர்தர்ஷன்!

காங்கிரஸ் - சமாஜ்வாதி வென்றால் ராமர் கோயிலை புல்டோசர் வைத்து இடிப்பார்கள்: மோடி

SCROLL FOR NEXT