உலகம்

2020-ல் நான் தான் அமெரிக்க அதிபர் வேட்பாளர்: சொல்கிறார் இந்திய வம்சாவளிப் பெண்

DIN

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த துல்ஸி கப்பார்டு என்பவர் 2020-ல் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ளதாக வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர் துல்ஸி கப்பார்டு (37). இவர் தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

வருகிற 2020-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளேன். இதுகுறித்து அடுத்த வாரத்துக்குள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க திட்டமிட்டுள்ளேன். போர் மற்றும் அமைதி தான் எனது முக்கிய நோக்கங்களாகும். அதுதொடர்பாகவே எனது பிரசாரங்களும் அமையும் என்றார்.

இவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஹிந்து மற்றும் அமெரிக்க சமோவன் வம்சாவளி ஆகியவற்ற தனது பூர்விகமாகக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

SCROLL FOR NEXT