உலகம்

ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரை பட்டியல் வெளியீடு

DIN


சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர், நடிகை உள்பட பல்வேறு பிரிவுகளுக்கான ஆஸ்கர் பரிந்துரை பட்டியல் செவ்வாய்க்கிழமை வெளியானது.
உலக திரைப்படத் துறையில் மிக உயரிய விருதாகக் கருதப்படும் ஆஸ்கர் விருதுகள் வரும் பிப்ரவரி 22ஆம் தேதி அளிக்கப்படவுள்ளன.
சிறந்த திரைப்படப் பிரிவில், பிளாக் பாந்தர், கிரீன் புக், ரோமா, எ ஸ்டார் இஸ் பார்ன், வைஸ், தி ஃபேவரிட், பிளாக்கிளான்ஸ்மேன், போஹிமியன் ராப்úஸாடி ஆகியவை இடம்பெற்றுள்ளன.
சிறந்த இயக்குநருக்கான பிரிவில், ஸ்பைக் லீ (திரைப்படம்-பிளாக்கிளான்ஸ்மேன்), வெல் பவ்லிகோஸ்கி (கோல்ட் வார்), யோர்கோஸ் லந்திமோஸ் (தி ஃபேவரிட்), அல்ஃபோன்úஸா குவரோன் (ரோமா), ஆடம் மெக்கே (வைஸ்) ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
சிறந்த நடிகருக்கான பிரிவில், கிறிஸ்டியன் பேல் (திரைப்படம்- வைஸ்), பிராட்லி கூப்பர் (எ ஸ்டார் இஸ் பார்ன்), ரமி மாலிக் (போஹிமியன் ராப்úஸாடி) , விகோ மார்டென்சென் (கிரீன் புக்), வில்லியம் டேஃபோ (அட் இடர்நிட்டி கேட்) ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
சிறந்த நடிகைக்கான பிரிவில், யாலிட்ஸா அபாரிசியோ (திரைப்படம்-ரோமா), கிளென் க்ளோஸ் (தி வைஃப்), ஒலிவியா கோல்மேன் ( தி ஃபேவரிட்), லேடி ககா (எ ஸ்டார் இஸ் பார்ன்), மெலிசா மெக்கார்தி (கேன் யூ எவர் ஃபர்கிவ் மீ) ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
சிறந்த இசை, சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த திரைக்கதை உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்பப் பிரிவுகளிலும் பரிந்துரை பட்டியல் வெளியாகியுள்ளது. ரோமா, தி ஃபேவரிட் ஆகிய திரைப்படங்கள் தலா 10 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT