உலகம்

பிலிப்பைன்ஸ் சர்ச்சில் இரட்டை குண்டு வெடிப்பு: 17 பேர் பலி 

DIN

மணிலா: பிலிப்பைன்ஸ் சர்ச் ஒன்றில் ஞாயிறு காலை நடந்த இரட்டை குண்டு வெடிப்பு தாக்குதலில் 17 பேர் பலியானார்கள். 

பிலிப்பைன்ஸ் நாட்டில் தென்மேற்கே அமைந்துள்ளது சூலு நகர். இங்குள்ள ஜோலோ கிறிஸ்தவ ஆலயத்தில் ஞாயிறு காலை வழக்கமான வாராந்திர  வழிபாடு இறை நடந்தது.  அப்போது காலை 8 மணியளவில் ஆலயத்தில் இரு சக்தி வாய்ந்த குண்டுகள் வெடிப்பு தாக்குதல்கள் நடந்தன.

எதிர்பாராத இந்த சம்பவத்தில் 17 பேர் கொல்லப்பட்டனர்.  12 பேர் பலத்த காயமடைந்து உள்ளனர்.  இதன் காரணமாக பலியானோர் எண்ணிக்கை உயரக் கூடும் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்தில் இங்குள்ள மின்டானாவோ நகரில் பிலிபைன்ஸ் நாட்டில் வசிக்கும் முஸ்லிம் பிலிப்பினோக்களுக்காக சுயாட்சி பகுதி உருவாக்கத்திற்காக புதிய சட்டம் ஒன்று கொண்டு வரப்பட்டது.  இந்த சட்டத்திற்கு ஜோலோ ஆலயம் எதிர்ப்பு தெரிவித்து இருந்தது.  ஆனாலும் 15 லட்சத்திற்கு கூடுதலான வாக்குகளை பெற்று இந்த சட்டம் கடந்த சில நாட்களுக்கு முன்புதான்  நிறைவேறியது.

இந்நிலையில் இந்த வெடிகுண்டு தாக்குதல்கள் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருடப்பட்டதா எலக்சன் திரைக்கதை? எழுத்தாளர் குற்றச்சாட்டு

சைத்ரா ரெட்டியின் தருணங்கள்!

ஐபிஎல் ஒளிபரப்பாளர்களை கடுமையாக விமர்சித்த ரோஹித் சர்மா!

தில்லி-கெய்ரோவை இணைக்கும் தினசரி விமான சேவையை முன்னெடுக்க எகிப்து ஏர் தீர்மானம்!

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

SCROLL FOR NEXT