உலகம்

27 ஆண்டுகள் காணாத பின்னடைவு...சீனாவின் பொருளாதார வளர்ச்சி 6.2 சதவீதமாக சரிவு

DIN


உலகின் இரண்டாவது மிகப் பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட சீனாவின் பொருளாதார வளர்ச்சி இரண்டாவது காலாண்டில் 6.2 சதவீதமாக குறைந்துள்ளது.
இதுகுறித்து சீன அரசு திங்கள்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளதாவது:
நடப்பு 2019-ஆம் ஆண்டின் ஜனவரி முதல் மார்ச் வரையிலான முதல் காலாண்டில் சீனப் பொருளாதாரம் 6.4 சதவீத வளர்ச்சியைப் பெற்றிருந்தது. இந்த நிலையில், ஏப்ரல் -ஜூன் வரையிலான இரண்டாவது காலாண்டில் பொருளாதார வளர்ச்சி கடந்த 27 ஆண்டுகளில் இல்லாத அளவில் 6.2 சதவீதமாக சரிந்துள்ளது. 
நடப்பாண்டின் முதல் அரையாண்டில் சீன பொருளாதாரம் 6.3 சதவீத வளர்ச்சியை பெற்று 6.56 லட்சம் கோடி டாலரைத் தொட்டுள்ளது என அந்தப் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
உலகப் பொருளாதார நெருக்கடி காணப்பட்ட 2009-ஆம் ஆண்டில் கூட சீனாவின் பொருளாதார வளர்ச்சி 6.4 சதவீதத்துக்கும் குறையாமல் இருந்தது. 
இந்த நிலையில்தான் தற்போதுதான் சீனாவின் பொருளாதாரம் இந்த அளவுக்கு குறைந்துள்ளது. 
சர்வதேச தேவையில் ஏற்பட்ட மந்த நிலை மற்றும் அமெரிக்காவுடன் ஏற்பட்ட வர்த்தக போர் ஆகியவையே இந்த பின்னடைவுக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
கடந்த 2018-இல் பொருளாதார வளர்ச்சியானது 6.6 சதவீதமாக காணப்பட்ட நிலையில், நடப்பாண்டில் அதன் வளர்ச்சி 6.0-6.5 சதவீதம் அளவுக்கே இருக்கும் 
என சீன அரசு பல்வேறு சூழல்களை கருத்தில் கொண்டு குறைத்து இலக்கு நிர்ணயித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

நரிமணத்தில் நீா் மோா் பந்தல் திறப்பு

பஞ்சாப் சுழலில் சிக்கிய சென்னை: மீட்டாா் கெய்க்வாட்

‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

வாகன பதிவெண் பலகையில் ஸ்டிக்கா்: இன்றுமுதல் அபராதம்

SCROLL FOR NEXT