உலகம்

பிரிட்டன் அடுத்த பிரதமர் யார்? இன்று தெரியும்

DIN

பிரிட்டனின் அடுத்த பிரதமர் யார் என்பது செவ்வாய்க்கிழமை தெரியவரும். அந்நாட்டில் ஆளும் கன்சர்வேடிவ் கட்சியின் முக்கியத் தலைவர்கள் போரிஸ் ஜான்சன், ஜெரிமி ஹன்ட் இடையே பிரதமர் பதவிக்கு போட்டி உள்ளது. பிரதமரைத் தேர்வு செய்வதற்கான இறுதிக்கட்ட தேர்தல், திங்கள்கிழமை மாலை நிறைவடைந்தது. இதில் யார் வெற்றி பெற்றார் என்பது செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்படும்.
போரிஸ் ஜான்சன் முன்னாள் வெளியுறவு அமைச்சராவார். ஜெரிமி ஹன்ட் இப்போது வெளியுறவுத் துறை அமைச்சராக உள்ளார். இவர்களில் யார் அடுத்த பிரதமர் என்பதை கன்சர்வேடிவ் கட்சியின் உறுப்பினர்களின் வாக்குகள் முடிவு செய்யவுள்ளன. 1,60,000-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் தபால் மூலம் வாக்குகளைச் செலுத்தியுள்ளனர். பிரதமரை முடிவு செய்வதில் இந்த வாக்குகள் முக்கியப் பங்கு வகிக்கும். எனினும், போரிஸ் ஜான்சன் பிரிட்டனின் புதிய பிரதமராக அதிக வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னதாக, ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் விலகுவதில் (பிரெக்ஸிட்) இழுபறி நீடித்து வருவதன் எதிரொலியாக, பிரதமர் பதவியை ராஜிநாமா செய்வதாக பிரதமர் தெரசா மே கடந்த மே மாதம் அறிவித்தார். இதையடுத்து பிரதமர் பதவிக்கு ஆளும் கன்சர்வேடிவ் கட்சி எம்.பி.க்களிடையே கடும் போட்டி ஏற்பட்டது. கன்சர்வேடிவ் கட்சியின் 10 எம்.பி.க்கள் பிரதமர் பதவிக்கான போட்டியில் இருந்தனர். பல சுற்று வாக்கெடுப்புக்குப் பிறகு பிரதமர் பதவிக்கான தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டியது. இதில் வெற்றி பெறுபவர் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராகவும் அறிவிக்கப்படுவார். புதிய பிரதமர் புதன்கிழமை பதவியேற்பார் என்று ஆளும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கன்சர்வேடிவ் கட்சியின் தலைவர் பதவியை தெரசா மே ஏற்கெனவே ராஜிநாமா செய்துவிட்டார். புதிய பிரதமரை கட்சி தேர்வு செய்யும் வரை பிரதமர் பதவி அவர் வசம் இருக்கும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ.4 கோடி பறிமுதல் - சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு

செந்தில் பாலாஜி வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்புக் கேட்ட அமலாக்கத்துறை

சென்னையில் வாட்டும் வெயில் மட்டுமா.. குடிநீர் தட்டுப்பாடும் வருமா? ஏரிகளின் நீர்மட்ட நிலவரம்!

சென்னைக்கு கோடையில் குடிநீர் தட்டுப்பாடு வர வாய்ப்பு இல்லை

வெங்கடேஷ் பட்டின் ‘டாப் குக்கு டூப் குக்கு’!

SCROLL FOR NEXT