துபையில் 15 ஆயிரம் கிலோ காகிதக் கழிவுகளை சேகரித்த இந்திய வம்சாவளி சிறுமி
சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசாரத்தை முன்னெடுக்கும் வகையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 8 வயது சிறுமி 15 ஆயிரம் கிலோ காகிதக் கழிவுகளை சேகரித்துள்ளார்.
துபை: சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசாரத்தை முன்னெடுக்கும் வகையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 8 வயது சிறுமி 15 ஆயிரம் கிலோ காகிதக் கழிவுகளை சேகரித்துள்ளார்.
நியா டோனி என்ற அந்தச் சிறுமி, சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் காகிதக் கழிவுகளை சேகரித்ததற்காக கௌரவிக்கப்பட்டார்.
நான் என்னை சுற்றியிருக்கும் பகுதிகளில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, 15 ஆயிரம் கிலோ காகிதங்களை சேகரித்து, அதனை மறுசுழற்சி ஆலைக்கு அனுப்பி வைத்துள்ளேன் என்கிறார்.
வீட்டில் சேகரித்து வைக்க விருப்பமில்லாத காகிதத் துண்டுகள், நாளிதழ், புத்தகங்களை மக்கள் வெளியே தூக்கி எறிந்துவிடுகிறார்கள். அவற்றை வாரந்தோறும் பள்ளி விடுமுறையில் சென்று சேகரித்து வருகிறேன். இதன் மூலம் சுற்றுச்சூழலை மாசில்லாத நிலைக்கு மாற்றுவதும், மற்றவர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் முடிகிறது என்கிறார் அந்த குட்டிச்சிறுமி.