உலகம்

ரஷியாவுடனான ஒப்பந்தத்திலிருந்து பின்வாங்க மாட்டோம்: துருக்கி திட்டவட்டம்

DIN


அதிநவீன எஸ்-400 வான்பாதுகாப்பு ஏவுகணைத் தொகுதிகளை வாங்குவதற்காக ரஷியாவுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்திலிருந்து பின்வாங்கப் போவதில்லை என்று துருக்கி அதிபர் எர்டோகன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தொலைக்காட்சியில் அவர் செவ்வாய்க்கிழமை ஆற்றிய உரையில் கூறியதாவது: அமெரிக்காவின் நெருக்கடியை ஏற்று, ரஷியாவிடமிருந்து எஸ்-400 ஏவுகணைத் தொகுதிகளை வாங்குவதற்கான ஒப்பந்தத்திலிருந்து ஒருபோதும் பின்வாங்க மாட்டோம். அந்த ஏவுகணைகளை வாங்கிப் பயன்படுத்துவது என்பது துருக்கியின் இறையாண்மை தொடர்பான விவகாரம் ஆகும். எனவே, அந்த இறையாண்மையைக் குலைக்கும் வகையில் அந்தத் திட்டம் கைவிடப்படாது.
திட்டமிட்டபடி ரஷியாவிலிருந்து எஸ்-400 ஏவுகணைகள் அடுத்த மாதம் வரத் தொடங்கும். துருக்கியின் பாதுகாப்பு தேவைகளை நிறைவு செய்து கொள்வதற்கு எந்த நாட்டின் அனுமதியும் நமக்குத் தேவையில்லை என்றார் எர்டோகன்.
தாக்க வரும் எதிரிகளின் ஏவுகணைகள் மற்றும் விமானங்களை தரையிலிருந்து பாய்ந்து இடைமறித்து அழிக்கும் அதிநவீன எஸ்-400 ஏவுகணைத் தொகுதிகளை ரஷியாவிடமிருந்து வாங்க துருக்கி ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இதற்கு அமெரிக்கா கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தும், அந்த ஒப்பந்ததைக் கைவிட துருக்கி அதிபர் எர்டோகன் மறுத்துவிட்டார்.
அதற்குப் பதிலடியாக, துருக்கிக்கு தனது அதிநவீன எஃப்-35 ரக போர் விமானங்களின் விற்பனை செய்வதை நிறுத்தி வைப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
இந்த பரபரப்பான சூழலில், அதிபர் எர்டோகன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT