உலகம்

சிறப்பு வர்த்தக அந்தஸ்தை ரத்து செய்யத் துடிக்கும் ட்ரம்ப்: இந்தியாவுக்கு 3.6 லட்சம் கோடிக்கு நஷ்டம்? 

இந்தியாவுக்கான சிறப்பு வர்த்தக அந்தஸ்தை ரத்து செய்ய வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறி வருவதால், இந்தியா சுமார் ரூ. 3.6 லட்சம் கோடி வரிச்சலுகைகளை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

DIN

நியூயார்க்: இந்தியாவுக்கான சிறப்பு வர்த்தக அந்தஸ்தை ரத்து செய்ய வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறி வருவதால், இந்தியா சுமார் ரூ. 3.6 லட்சம் கோடி வரிச்சலுகைகளை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் மதுபானங்கள், ஹார்லி டேவிட்சன் மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட பொருட்களுக்கு, இந்தியா 100 முதல் 150 % வரை வரி விதிப்பதால் இந்தியா மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கோபம் கொண்டுள்ளார். அதற்கு எதிர்வினையாக இந்தியாவின் சிறப்பு வர்த்தக நாடு என்ற அந்தஸ்தையும் அவர் ரத்து செய்ய முடிவு செய்துள்ளார்.

இருநாடுகள் இடையில் இறக்குமதி, ஏற்றுமதி வரி வேறுபாட்டால் அமெரிக்காவுக்கு பெரும் பொருளாதார பாதிப்பு ஏற்படுகிறது என்பதை அவர் சுட்டிக்காட்டி விமர்சித்திருந்தார். இதையடுத்து இந்தியாவின் சிறப்பு வர்த்தக நாடு என்பதை அமெரிக்க ரத்து செய்துள்ளது. அத்துடன் இந்தியாவுக்கான பொருளாதார ரீதியில் வளர்ந்து வரும் நாடு என்ற சிறப்பு அந்தஸ்தையும் ரத்து செய்வோம் என எச்சரித்துள்ளது.

இதுதொடர்பாக வாஷிங்டனில் அமெரிக்க வர்த்தக பிரதிநிதி ராபர்ட் லைட்ஹைசர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'அதிபர் டிரம்பின் உத்தரவின் பேரில் இந்தியாவுக்கான சிறப்பு வர்த்தக தகுதியை நிறுத்த முடிவு செய்திருப்பதாக தெரிவித்துள்ளார். இதன் மூலம் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் சுமார் 5 .6 பில்லியன் டாலர் மதிப்புடைய பொருட்களுக்கான வரிச்சலுகைகள் ரத்தாக கூடும் அபாயம் இருக்கிறது என்று தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரோபோ சங்கர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!

கனகாம்பரமும் தாவணியும்... ஸ்ரவந்தி சொக்கராபு!

ஆஸி.க்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து ஜெமிமா ரோட்ரிக்ஸ் விலகல்!

மோடி பிரதமரானதும் நான் வெற்றிபெற தொடங்கினேன்! பி.வி. சிந்து பகிர்ந்த கதை!

ஜிஎஸ்டி சீர்திருத்தங்களால் மக்களிடம் பணத்தின் இருப்பு அதிகரிக்கும்: நிர்மலா சீதாராமன்

SCROLL FOR NEXT