உலகம்

தானியங்கி துப்பாக்கிகளுக்கு தடை: நியூஸி. பிரதமர் அதிரடி

DIN

நியூஸிலாந்தின் கிறைஸ்ட்சர்ச் நகரிலுள்ள இரு மசூதிகளில், 28 வயது நபர் கடந்த வெள்ளிக்கிழமை அடுத்தடுத்து துப்பாக்கிச் சூடு நடத்தினார்.
 இந்த பயங்கரவாதத் தாக்குதலில் 5 இந்தியர்கள் உள்பட 50 பேர் உயிரிழந்தனர்.

இதுகுறித்து நியூஸிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன், அந்நாட்டு நாடாளுமன்றத்தில் கூறுகையில், 

துப்பாக்கிச் சூடு நடத்தியவருக்கு மிகக் கடுமையான தண்டனை பெற்றுத் தரும் வகையில், அவர் மீது முழுவீச்சில் சட்டப் பிரயோகம் செய்யப்படும். அவர் ஒரு பயங்கரவாதி, குற்றவாளி, இன வெறியர். அதைத் தவிர அவருக்கு வேறு பெயரில்லை என்றார்.

மேலும், ராணுவ வகை தானியங்கி மற்றும் உயர் ரக குண்டுகள் அடங்கிய தாக்குதல் துப்பாக்கிகள் உள்ளிட்டவற்றை நியூஸிலாந்தில் பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது என்று செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

SCROLL FOR NEXT