இஸ்லாமாபாத்: இந்திய படைகளின் தாக்குதலில் இருந்து பயங்கரவாதிகளை காக்கும் பணியை பாகிஸ்தான் அரசு செய்வதாக, மறைந்த பெனாசிர் பூட்டோவின் மகன் பிலாவால் பூட்டோ தெரிவித்துள்ளார்.
புல்வாமா பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து சர்வதேச சமூகத்தின் நெருக்கடியால் பல பயங்கரவாத அமைப்புகளை பாகிஸ்தான் அரசு தடை செய்துள்ளது.
இந்நிலையில் இந்திய படைகளின் தாக்குதலில் இருந்து பயங்கரவாதிகளை காக்கும் பணியை பாகிஸ்தான் அரசு செய்வதாக, மறைந்த பெனாசிர் பூட்டோவின் மகன் பிலாவால் பூட்டோ தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மறைந்த பிரதமர் பெனாசிர் பூட்டோவின் மகனும், பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவருமான பிலாவல் பூட்டோ நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:
பயங்கரவாதிகளை கைது செய்து இருப்பதாக இம்ரான் கான் அரசு சொல்கிறது. ஆனால் இதை நம்ப நான் தயாராக இல்லை. பயங்கரவாதிகள் கைது செய்யப்படவில்லை. பதிலாக இந்திய போர் விமானங்களின் குண்டு வீச்சில் இருந்து பாதுகாக்க அவர்கள் பாதுகாப்பான இடங்களில் பாகிஸ்தான் அரசால் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் பயங்கரவாதிகளின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள். அது எந்த விதத்தில் முடக்கப்பட்டுள்ளது. முஷரப்பின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன. ஆனால் என்ன ஆனது? அவர் பணத்துக்காக வெளிநாட்டுக்கு ஓடிவிட்டார்.
பயங்கரவாதிகளுக்கு பாதுகாப்பு கொடுப்பது என்பது இந்தியாவுடன் நடத்தப்பட்ட ய பேச்சு வார்த்தைக்கு துரோகம் இழைப்பதாகும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.