உலகம்

பிரேசில் முன்னாள் அதிபர் சிறையிலிருந்து விடுவிப்பு

DIN


பிரேசில் முன்னாள் அதிபர் மிஷெல் டெமெர் (78) , சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். பணமோசடி வழக்கில், அந்நாட்டு நீதிமன்றம் அவருக்கு ஆதரவாகத் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து, அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
மிஷெல் டெமெர், பணமோசடியில் ஈடுபட்டதாக அரசு தரப்பு வழக்குரைஞர் குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து, கடந்த வியாழக்கிழமை தடுப்புக் காவலில் கைது செய்யப்பட்ட அவர், தலைநகர் ரியோ டி ஜெனிரோவில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார். 
இது தொடர்பாக, நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. அப்போது நீதிபதி, ஊழல் இல்லாத நாடாக பிரேசில் திகழ வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். ஆனால், நாட்டின் அரசமைப்புச் சட்டத்தில், ஊழலை ஒழிக்கப் போதுமான உத்தரவாதம் இல்லாதபோது, நாட்டில் ஊழலை ஒழிப்பது கடினமே. குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக ஆதாரங்கள் இருப்பினும், அவரைத் தடுப்புக் காவலில் கைது செய்துள்ளதற்குப் போதிய ஆதாரங்கள் இல்லை என்றார்.
நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து, சிறையிலிருந்து மிஷெல் விடுவிக்கப்பட்டார். எனினும், நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இருப்பதாக அரசு தரப்பு வழக்குரைஞர் தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உலக கராத்தே போட்டி: விழுப்புரத்திலிருந்து மூவா் பங்கேற்பு

தஞ்சை அருகே சோழர் கால நந்தி, விஷ்ணு சிற்பங்கள் கண்டெடுப்பு

தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

SCROLL FOR NEXT