உலகம்

கென்யாவில் ட்ரக்கின் மீது பேருந்து மோதி 14 பேர் பலி 

ஆப்பிரிக்க நாடான கென்யாவில் ட்ரக்கின் மீது பேருந்து மோதிய விபத்தில் 14 பேர் பலியானார்கள்.

IANS

நைரோபி: ஆப்பிரிக்க நாடான கென்யாவில் ட்ரக்கின் மீது பேருந்து மோதிய விபத்தில் 14 பேர் பலியானார்கள்.

ஆப்பிரிக்க நாடான கென்யாவின் கிழக்கு பகுதியில் உள்ளது மசகோஸ் மாகாணம். இங்கு புதன்கிழமை அதிகாலை 5 மணியளவில் மோசமான சாலை விபத்து நிகழ்ந்துள்ளது.

அங்கிருந்து தலைநகர் நைரோபிக்குச் சென்று கொண்டிருந்த பயணிகள் பேருந்து ஒன்று வழியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ட்ரக் ஒன்றின் மீது பயங்கரமாக மோதியது

இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 11 ஆண்கள், 2 பெண்கள் மற்றும் ஒரு குழந்தை என மொத்தம் 14 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.     

எத்தனையோ விதமான விழிப்புணர்வு நிகழ்வுகள் மற்றும் பிரசாரங்கள் செய்யப்பட்ட போதும் ஒவ்வொரு ஆண்டும் கென்யாவில் சாலை விபத்துகளில் 3000 பேர் மரணமடைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உசுரே நீதானே.... ஜனனி!

பூம்புகார் சங்கமத்துறையில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்!

தீரன் சின்னமலை நினைவு நாள்! முதல்வர் மு.க. ஸ்டாலின் மலர் தூவி மரியாதை!

விருதே வாழ்த்திய தருணம்: ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி!

குடியரசுத் தலைவர் முர்முவுடன் பிரதமர் மோடி சந்திப்பு

SCROLL FOR NEXT