முகப்பு
உலகம்

மெக்ஸிகோ விமான விபத்தில் 13 பேர் சாவு

மெக்ஸிகோவில் விமானம் விழுந்து நொருங்கி விபத்துக்குள்ளானதில் 13 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

Updated On : 7 மே, 2019 at 11:25 AM
பகிர்:

மெக்ஸிகோவில் விமானம் விழுந்து நொருங்கி விபத்துக்குள்ளானதில் 13 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து கிளம்பிய இந்த தனியார் விமானத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உட்பட 13 பேர் பயணம் செய்துள்ளனர். 

இந்நிலையில், விமானம் புறப்பட்ட 2 மணி நேரத்தில் கட்டுப்பாட்டை இழந்து, தொடர்பும் துண்டிக்கப்பட்டதாக விமானத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து மெக்ஸிகோ வடக்குப் பகுதியில் உள்ள மலைப்பகுதியில் இந்த விமானம் விழுந்த நொருங்கி விபத்துக்குள்ளானது.

Advertisement

மேலும் விமானத்தில் பயணம் செய்த 13 பேரும் உயிரிழந்துவிட்டதாக மெக்ஸிகோவின் கௌஹுலியா அரசு அதிகாரிகள் உறுதிபடுத்தினர். இருப்பினும் விபத்து குறித்த காரணம் தெரியவில்லை. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.