உலகம்

ரசிகையின் ஆர்வக் கோளாறால் சேதமடைந்த மெர்க்கெலின் விமானம்

DIN


ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கெலின் அதிகாரப்பூர்வ விமானம் சேதமடைந்தது. அவரது ரசிகையின் ஆர்வக் கோளறோ இதற்குக் காரணம் ஆகும்.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கெல் செல்வதற்கான விமானப் படையின் குளோபல் 5000 விமானம், அந்த நாட்டின் டார்ட்மண்ட் விமான நிலையத்தில் கடந்த திங்கள்கிழமை நிறுத்தப்பட்டிருந்தது.
அப்போது அங்கு வந்த ஏஞ்சலா மெர்க்கெல்லின் தீவிர ரசிகையான விமான நிலைய பெண் ஊழியர், அந்த விமானத்தைக் கண்டதும் உற்சாகத்துடன் தனது காரிலிருந்து இறங்கி வந்து அதனை தனது செல்லிடப் பேசி மூலம் படமெடுக்கத் தொடங்கினார்.
எனினும், உற்சாக மிகுதியில், தனது கார் சரிவில் நகர்வதைத் தடுப்பதற்கான பார்க்கிங் பிரேக்கை பயன்படுத்த அவர் மறந்துவிட்டதால், அந்தக் கார் தானாக உருண்டு வந்து ஏஞ்சலா மெர்க்கெலின் விமானத்தின் மீது மோதியது. இதில் அந்த விமானம் சேதமடைந்தது. அதையடுத்து, ஹெலிகாப்டர் மூலம் மெர்க்கெல் பெர்லின் திரும்பினார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மோடிக்கு எதிராக செல்வப்பெருந்தகை வழக்கு

தக் லைஃபில் அசோக் செல்வன்!

தொடரும் ஷவர்மா மரணங்கள்: மும்பையில் இளைஞர் பலி!

ஜெயக்குமார் மரணம்: தடயங்கள் கிடைக்காமல் திணறும் காவல்துறை

நடுவருடன் வாக்குவாதம்: சஞ்சு சாம்சனுக்கு அபராதம்!

SCROLL FOR NEXT