உலகம்

இலங்கையில் விடுதலைப் புலிகள் அமைப்புடன் உள்நாட்டுப் போர் முடிந்து 10 ஆண்டுகள் நிறைவு

இலங்கையில் விடுதலைப் புலிகள் அமைப்புக்கு எதிராக நடைபெற்ற உள்நாட்டுப் போர் முடிந்து சனிக்கிழமையுடன் 10 ஆண்டுகள் நிறைவு பெற்றது.

DIN


கொழும்பு: இலங்கையில் விடுதலைப் புலிகள் அமைப்புக்கு எதிராக நடைபெற்ற உள்நாட்டுப் போர் முடிந்து சனிக்கிழமையுடன் 10 ஆண்டுகள் நிறைவு பெற்றது.

எனினும், இன்னமும் போரால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நீதி கிடைக்காமல் உள்ளது. விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனை கடந்த 2009ஆம் ஆண்டு  மே 18ஆம் தேதி இலங்கை ராணுவம் கொலை செய்தது. 

30 ஆண்டு காலமாக நீடித்துவந்த உள்நாட்டுப் போரின் முடிவில் 1 லட்சம் பேர் வரை கொல்லப்பட்டனர். பாதுகாப்புப் படையினர் உள்பட ஆயிரக்கணக்கானோர் காணாமல் போய்விட்டதாக பட்டியல் வெளியிடப்பட்டது. தற்போது வரை அவர்கள் காணாமல் போனவர்களின் பட்டியலில் உள்ளனர். "இலங்கையின் வடக்குப் பகுதியில் நூற்றுக்கணக்கான மக்கள் மே 18 தினத்தை அனுசரித்தனர்' என்று கொழும்பு கெஜட் செய்தி இணையதளத்தில் செய்தி வெளியாகியுள்ளது.

உள்நாட்டுப் போரின் வெற்றி தினத்தை ஞாயிற்றுக்கிழமை கொண்டாடவுள்ளதாக இலங்கை பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் அமைதிக்காக இன்னுயிரைத் தந்தவர்களுக்காக அமைதி ஜோதியை ஏற்றுமாறும் அந்த அறிக்கையில் நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனினும், உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னமும் அரசால் நீதி வழங்கப்படவில்லை என்று மனித உரிமைகள் ஆணையம் குற்றம்சாட்டியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய பேருந்து நிலையங்களுக்கு அந்த பகுதியின் மன்னர்கள் பெயரை சூட்ட வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

முக்தி அலங்காரத்தில் அருள்பாலித்த பஞ்சமுக ஆஞ்சநேயர்!

ஆஷஸ்: சொந்த மண்ணில் வரலாறு படைத்த டிராவிஸ் ஹெட்!

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நிறைவு! வந்தே மாதரம் இசைக்கப்பட்டு ஒத்திவைப்பு!

தங்கம் விலை குறைவு: எவ்வளவு?

SCROLL FOR NEXT