உலகம்

உங்களுக்கு கூட்டணி தேவையில்லை, ஆனால் எனக்கு அவசியம்: பிரதமர் மோடிக்கு இஸ்ரேல் பிரதமரின் தொலைபேசி விடியோ

DIN

மக்களவைத் தேர்தலில் 345 தொகுதிகளை கைப்பற்றி, மத்தியில் ஆட்சியை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தக்க வைத்து கொண்டுள்ளது. இந்த வெற்றியைத் தொடர்ந்து, நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி (68) தொடர்ந்து 2ஆவது முறையாக விரைவில் பதவியேற்கிறார். 

இதையடுத்து ரஷியா, சீனா, அமெரிக்கா, ஜப்பான், இலங்கை, பாகிஸ்தான் உள்ளிட்ட சர்வதேசத் தலைவர்கள் பிரமதர் நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாஹு, நரேந்திர மோடிக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார். அப்போது உங்கள் கூட்டணி எனக்கு நிச்சயம் தேவை என்று தெரிவித்தார். இந்த விடியோப் பதிவு தற்போது வைரலாகப் பரவி வருகிறது. 

அதில் அவர் பேசியதாவது, நண்பரே நரேந்திர மோடி, உங்கள் வெற்றிக்கு எனது வாழ்த்துகள். இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியாகும். நாம் இருவரும் மிக விரைவில் நமது அரசுகளை அமைத்த பின்னர் சந்திப்போம் என்று நம்புகிறேன். எனது வெற்றிக்காக நீங்கள் வாழ்த்து கூறியதற்கு மிக்க நன்றி. உங்களது வெற்றிக்கும், எனது வெற்றிக்கும் ஒரு வித்தியாசம் உள்ளது. நீங்கள் ஆட்சியமைக்க கூட்டணித் தேவையில்லை. ஆனால், எனக்கு கூட்டணி அவசியம் என்று இந்தியாவுடனான நட்புறவு குறித்து நகைச்சுவையுடன் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமணமாகி 4 ஆண்டுகளே ஆன பெண் தூக்கிட்டு தற்கொலை: ஆா்டிஓ விசாரணை

குமரியில் சூரியோதயம்

தேசிய கட்சிகளின் ஆதிக்கத்தில் கோவா!

அமேதி, ரேபரேலி: அமைதி காக்கும் காங்கிரஸ்!

அல்கராஸுக்கு அதிா்ச்சி அளித்த ரூபலேவ்

SCROLL FOR NEXT