உலகம்

உணவக சமையலறையில் உல்லாசக் குளியல்: பணி நீக்கம் செய்யப்பட்ட  ஊழியர் 

அமெரிக்காவில் துரித உணவகமொன்றின் உள்ள பாத்திரங்கள் கழுவும் பெரிய தொட்டியில், ஊழியர் ஒருவர் குளிக்கும் விடியோ வெளியானதை அடுத்து, அவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.  

DIN

ப்ளோரிடா: அமெரிக்காவில் துரித உணவகமொன்றின் உள்ள பாத்திரங்கள் கழுவும் பெரிய தொட்டியில், ஊழியர் ஒருவர் குளிக்கும் விடியோ வெளியானதை அடுத்து, அவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.  

அமெரிக்காவில் ப்ளோரிடா மாகாணத்தில், வெண்டேஸ்(wendeys) எனப்படும் துரித உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் வேலைபார்க்கும் ஊழியர் ஒருவர், அண்மையில் அங்குள்ள சமையலறையில் பாத்திரங்கள் கழுவும் பெரிய தொட்டியில் சோப்பு நீரை நிரப்பி, உற்சாகமாக  குளித்தார். 

இவரது செயலை அங்குள்ள சக ஊழியர்கள் கிண்டலடித்து சிரிக்கும் விடியோ காட்சியானது அண்மையில் முகநூலில் வைரலாகப் பகிரப்பட்டது.

இதனைப்பார்த்த பலரும் குறிப்பிட்ட ஊழியரின் செயல் அருவறுப்பாக இருப்பதாக கூறியதோடு, அவரது செயலுக்கு கடும் கண்டனமும் தெரிவித்தனர்.

இதையடுத்து அந்த விடியோவைப் பார்த்து அதிர்ச்சியடைந்த வென்டேஸ் உணவக உரிமையாளர், குறிப்பிட்ட ஊழியரை பணியிலிருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நவம்பர் மாத எண்கணித பலன்கள் - 3

நவம்பர் மாத எண்கணித பலன்கள் - 2

நவம்பர் மாத எண்கணித பலன்கள் - 1

அவமதிப்பு, புறக்கணிப்பு, வலிகளை எல்லாம் கடந்து சாதனை புரிந்த இந்திய மகளிர் கிரிக்கெட் அணி!

செப்டம்பர் நினைவுகள்... மாளவிகா மேனன்!

SCROLL FOR NEXT