உலகம்

மோடியால் அபுதாபியில் இந்தியாவுக்குக் கிடைத்த மிகப்பெரிய கௌரவம்

DIN


அபு தாபி: அபு தாபியில் உள்ள ஏடிஎன்ஓசி குழும கட்டடத்தில் நேற்று இந்தியா மற்றும் ஐக்கிய அரபு நாடுகளின் தேசியக் கொடிகளும், பிரதமர் மோடி மற்றும் அபுதாபியின் இளவரசர் மொஹம்மது பின் ஸயீத்தின் புகைப்படங்களும் ஒளிர வைக்கப்பட்டது.

இந்தியாவின் 16வது பிரதமராக நேற்று நரேந்திர மோடி பதவியேற்றுக் கொண்டதை கௌரவிக்கும் வகையிலும், இந்தியா - அபு தாபி இடையேயான நல்லுறவை பறைசாற்றும் வகையிலும் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

ஐக்கிய அரபு நாடுகளுக்கான இந்திய தூதர் நவ்தீப் சிங் சூரி தனது டிவிட்டர் பக்கத்தில் இது குறித்து செய்தியையும், விடியோவையும் இணைத்திருந்தார். 

பிரதமர் மோடியின் அபு தாபி வருகையால் கடந்த நான்கு ஆண்டுகளில் இந்தியா - அபுதாபி இடையேயான நட்புறவு பலப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அணிவகுத்து நின்ற வாகனங்கள்...

வருங்கால வைப்பு நிதி குறை தீா்க்கும் முகாம்

மும்பை விமான நிலையத்தில் 21 கிலோ தங்கம் பறிமுதல்!

ஹெலிகாப்டர் விபத்திலிருந்து உயிர்தப்பிய அமித் ஷா? என்ன நடந்தது?

தமிழகத்தில் ரூ.1,309 கோடி பறிமுதல்!: தேர்தல் ஆணையம்

SCROLL FOR NEXT