உலகம்

சீன-ஐரோப்பிய உறவு வளர்ச்சியை முன்னேற்றும் சீன-பிரெஞ்சு உறவு!

DIN


சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், பிரான்ஸ் அரசுத் தலைவர் மக்ரோன் ஆகியோர் 6-ஆம் நாள் பெய்ஜிங்கில் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்தப் பேச்சுவார்த்தையின்போது, ஷிச்சின்பிங் கூறுகையில், "உலகம், எதிர்காலம் மற்றும் பொதுமக்களை எதிர்நோக்குவது என்ற கோட்பாட்டின்படி, பிரான்ஸுடன் சேர்ந்து இருநாட்டு பன்முக நெடுநோக்குக் கூட்டாளியுறவை முன்னேற்ற சீனா விரும்புவதாக தெரிவித்தார்.

சீன-பிரெஞ்சு உறவு வளர்ச்சி தொடர்பாக ஷிச்சின்பிங் முன்வைத்த ஆலோசனை, இருநாட்டுறவுக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பததோடு மட்டுமல்லாது, சீன-ஐரோப்பிய உறவுக்கும் உலகின் நிதானமான வளர்ச்சிக்கும் அது முக்கியப் பங்காற்றும் என்று நம்புகின்றோம்.

பிரான்ஸ் அரசுத் தலைவர் மக்ரோனுடன் இணைந்து, ஐரோப்பிய ஒன்றிய ஆணையத்தின் வர்த்தக அலுவல் சிறப்பு அதிகாரி, ஜெர்மனி கூட்டாட்சி கல்வி மற்றும் ஆய்வு அலுவல் அமைச்சர் முதலியோர் சீனாவில் பயணம் மேற்கொண்டுள்ளனர். 

சீன-பிரெஞ்சு ஒத்துழைப்புக்கும் சீன-ஐரோப்பிய ஒன்றிய ஒத்துழைப்புக்கும், ஒட்டுமொத்தமாக கூட்டு நலன்கள் கொண்டுள்ளதை இப்பயணம் காட்டுகின்றது. மக்ரோன் சீனாவில் பயணம் மேற்கொண்டபோது, நிலவியல் சின்னப் பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பு பேச்சுவார்த்தை பற்றிய கூட்டறிக்கையில் சீனாவும் ஐரோப்பிய ஒன்றியமும் கையொப்பமிட்டன.

சீன-பிரெஞ்சு உறவின் உயர்வு சீன-ஐரோப்பிய ஒன்றிய உறவின் ஒட்டுமொத்த உயர்வை முன்னேற்றுவதை இது காட்டுகின்றது.

தகவல்: சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிலிண்டர் வெடித்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதி!

உதகையில் 73 ஆண்டுகளில் பதிவான 84.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம்!

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

ருதுராஜ், டேரில் மிட்செல் அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

வெள்ளியங்கிரி மலை ஏறிய பக்தர் ஒருவர் பலி: இந்த ஆண்டு இதுவரை 9 பேர் பலி

SCROLL FOR NEXT