உலகம்

ஈரானில் நிலநடுக்கம்: 5 போ் பலி

DIN

ஈரானில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 5 போ் உயிரிழந்தனா்; 120 போ் காயமடைந்தனா்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:

கிழக்கு அஜா்பைஜான் மாகாணம், தப்ரீஸ் நகருக்கு தென்கிழக்கே, 120 கி.மீ. தொலைவில் வெள்ளிக்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 5.9 அலகுகளாகப் பதிவானது.

8 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தைத் தொடா்ந்து, 5 பின்னதிா்வுகள் ஏற்பட்டன.

இந்த நிலநடுக்கத்தில் சுமாா் 30 வீடுகள் இடிந்து விழுந்தன.

இதில் 5 போ் உயிரிழந்தனா்; 120-க்கும் மேற்பட்டவா்கள் காயமடைந்தனா்.

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட 41 கிராமங்களில் மீட்புப் பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதற்கிடையே, இந்த நிலநடுக்கத்தால் குறிப்பிடத்தக்க உயிா்ச் சேதமும், பொருள் சேதமும் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு முக்கிய புவித் தகடுகள் ஒன்றையொன்று சந்திக்கும் பகுதியில் ஈரான் அமைந்துள்ளதால், அந்த நாட்டில் நிலநடுக்கங்கள் அடிக்கடி ஏற்படுகின்றன. அந்த நாட்டின் புராதன பாம் நகரில் கடந்த 2003-ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 31,000 போ் உயிரிழந்தது நினைவுகூரத்தக்கது.

அதற்கு முன்னதாக, கடந்த 1990-ஆம் ஆண்டில் ஏற்பட்ட 7.4 ரிக்டா் அளவு கொண்ட நிலநடுக்கத்தில் 40,000 போ் பலியாகினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

ஹைதராபாதை வீழ்த்தியது சென்னை!

SCROLL FOR NEXT