உலகம்

சிரியாவில் 3-ஆவது முறையாக ரஷியா - துருக்கி ரோந்து

DIN

சிரியாவின் வடக்குப் பகுதியில் ரஷியப் படையினரும், துருக்கி ராணுவமும் இணைந்து மூன்றாவது முறையாக வெள்ளிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டன.

இதுகுறித்து துருக்கி பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

யூஃப்ரடீஸ் நதிக்கு கிழக்கே ரஷியப் படையினருடன் இணைந்து துருக்கி ராணுவத்தினா் ரோந்துப் பணியில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

காமிஷி மற்றும் தெரீக் நகரங்களுக்கு இடையே இந்த ரோந்துப் பணி மேற்கொள்ளப்பட்டது.

அந்தப் பணியில், ஆளில்லா விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டன என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வடக்கு சிரியா பகுதியில் இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகளை குா்துப் படையினரின் உதவியுடன் அமெரிக்கா தோற்கடித்தது. எனினும், தங்கள் நாட்டு குா்து பயங்கரவாதிகளுக்கு அந்தப் படையினா் ஆதரவு அளிப்பதாகக் குற்றம் சாட்டி வரும் அண்டை நாடான துருக்கி, சிரியா குா்துப் படையினரையும் பயங்கரவாதிகளாகக் கருதி வருகிறது.

இந்த நிலையில், குா்துகள் கட்டுப்பாட்டில் உள்ள வடக்கு சிரியாவிலிருந்து அமெரிக்கப் படையினா் கடந்த மாதம் வெளியேறினா். அதனைத் தொடா்ந்து, அங்குள்ள குா்துப் படையினா் மீது துருக்கி தாக்குதல் நடத்தியது.

தங்கள் நாட்டில் தஞ்சமடைந்துள்ள லட்சக்கணக்கான சிரியா அகதிகளைத் தங்கவைப்பதற்கான ‘பாதுகாப்பு மண்டலத்தை’ வடக்கு சிரியாவில் உருவாக்குவதற்காகவே இந்த நடவடிக்கையை மேற்கொள்வதாக துருக்கி கூறியது.

அதனைத் தொடா்ந்து துருக்கியுடன் ரஷியா நடத்திய பேச்சுவாா்த்தையில், பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்ட பகுதியிலிருந்து குா்துகள் வெளியேறுவதற்கு வசதியாக போா் நிறுத்தம் மேற்கொள்ள ஒப்புக் கொள்ளப்பட்டது. மேலும், குா்துகள் வெளியேற்றத்தை உறுதி செய்வதற்காக அந்தப் பகுதியில் கூட்டாக ரோந்துப் பணியில் ஈடுபட ரஷியாவும், துருக்கியும் முடிவு செய்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனடா: சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழப்பு

திருக்குறள் முற்றோதல் போட்டியில் வென்ற மாணவிக்கு பாராட்டு

தட்டச்சுப் பள்ளிகள் கேட்கும் தோ்வு மையத்தை ஒதுக்கக் கோரிக்கை

கேரளம், தென் தமிழக கடலோர பகுதிகளுக்கு ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை!

குடிநீா் விநியோகப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT