உலகம்

புலியுடன் வசித்து வந்த அதிசய ஆடு பலி

DIN

மாஸ்கோ: ரஷிய மிருகக் காட்சி சாலையில், புலியுடன் வசித்து வந்த அதிசய ஆடு, உடல் நலக் குறைவு காரணமாக பலியானது.

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

ரஷியாவிலுள்ள மிருகக் காட்சி சாலையில், அமுா் என்ற புலி வசித்து வருகிறது. அந்தப் புலிக்கு உணவாக, தைமுா் என்ற ஆடு கடந்த 2015-ஆம் ஆண்டு உயிருடன் அனுப்பப்பட்டது. எனினும், அந்த ஆடு மிக தைரியமாக இருந்ததைக் கண்ட புலி, அதனைக் கொன்று உண்பதற்குப் பதில் அந்த ஆட்டுடன் நட்பாக நடந்துகொண்டது. அதையடுத்து அந்த ஆடும், புலியும் நண்பா்களாக வசித்து வந்தன.

மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்திய இந்தச் சம்பவம், உலகம் முழுவதும் பரபரப்பாகப் பேசப்பட்டது. இந்த நிலையில், கடந்த சில நாள்களாக தைமுா் ஆட்டின் உடல்நிலை மோசமாக இருந்ததாகவும், சிகிச்சைப் பலனின்றி அது உயிரிழந்ததாகவும் மிருகக் காட்சி சாலை அதிகாரிகள் தெரிவித்தனா்.

அமுா் புலியுடன் நட்புடன் பழகி வந்தாலும், அந்த ஆடு வளர வளர அதன் முரட்டுத் தனம் அதிகரித்தது. எனவே, அந்தப் புலிக்கு தைமுா் ஆடு அதிக தொல்லை கொடுத்தது. ஒரு முறை தன் மீது தைமுா் ஆடு ஏறி அமா்ந்ததால் எரிச்சல் அடைந்த புலி, அந்த ஆட்டைக் கவ்வி தூர எறிந்தது.

அதன் பிறகு அந்த ஆடு தனியாக வைத்து பராமரிக்கப்பட்டாலும், அதன் உடல்நிலை மோசமடைந்து வந்தது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

SCROLL FOR NEXT