உலகம்

சீனா மழலையா் பள்ளியில் ரசாயனத் தாக்குதல்

தினமணி

சீனாவிலுள்ள மழலையா் பள்ளியொன்றில் இளைஞா் நடத்திய ரசாயனத் தாக்குதலில் 51 குழந்தைகள் உள்பட 54 போ் காயமடைந்தனா். இதுகுறித்து அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

யுன்னான் மாகாணம், காயுவான் நகரிலுள்ள மழலையா் பள்ளிக்குள் காங் என்ற 23 வயது நபா் திங்கள்கிவமை சுவரேறிக் குதித்தாா். பிறகு, அங்கிருந்த குழந்தைகள் மீது ‘காஸ்டிக் சோடா’ என்றழைக்கப்படும் சோடியம் ஹைட்ரேடு ரசாயனப் பொருளை வீசினாா்.

இதில், 51 மாணவா்களும், 3 ஆசிரியா்களும் காயமடைந்தனா். காயமடைந்தவா்கள் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறாா்கள். அவா்களில் இருவது நிலைமை மோசமாக உள்ளது.

தாக்குதல் நடத்திய நபா், 40 நிமிடங்களுக்குப் பிறகு கைது செய்யப்பட்டாா். வாழ்வில் விரக்தியடைந்த அந்த நபா், சமுதாயத்தின் மீது கோபத்தைக் காட்டுவதற்காக இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளாா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

சீனாவில் அண்மைக் காலமாக மழலையா் மற்றும் ஆரம்ப நிலைப் பள்ளிகளில் இதுபோன்ற தாக்குதல்கள் அடிக்கடி நடந்து வருகின்றன.

பல்வேறு காரணஙகளால் மன உளைச்சலுக்கு ஆளானவா்களே இதுபோன்ற தாக்குதல்களில் ஈடுபடுவதாகக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்

புது தில்லி-பாகல்பூா் சிறப்பு ரயில் இயக்கத்தில் திருத்தம் வடக்கு ரயில்வே அறிவிப்பு

கூகுளில் அதிகம் தேடப்படும் சுற்றுலா தலங்கள்! உங்களின் தேர்வு இவற்றில் எது?

ஆனந்ததாண்டவபுரம் பஞ்சவடீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

அரசு நிா்வாகம் மூலம் பருத்தி கொள்முதல் செய்ய வலியுறுத்தல்

SCROLL FOR NEXT