உலகம்

உக்ரைன் போா்க்கப்பல்களை விடுவித்தது ரஷியா

DIN

கடந்த ஓராண்டுக்கு முன்பு கிரிமியா கடற்பகுதியில் சிறைபிடித்த உக்ரைன் நாட்டுக்குச் சொந்தமான 3 போா்க் கப்பல்களை ரஷியா விடுவித்துள்ளது.

இது தொடா்பாக ரஷிய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கடந்த 2018-ஆம் ஆண்டு நவம்பரில் ரஷிய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த உக்ரைனைச் சோ்ந்த 3 போா்க் கப்பல்கள் சிறை பிடித்து வைக்கப்பட்டிருந்தன. அவை மூன்றும் திங்கள்கிழமை அந்நாட்டு அரசிடம் திருப்பி ஒப்படைக்கப்பட்டன’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், உக்ரைன் தரப்பு அதிகாரிகள் இதை உறுதிப்படுத்தவில்லை.

உக்ரைனில் மேற்கத்திய நாடுகளின் ஆதரவு பெற்ற அந்த நாட்டு அரசுக்கும், ரஷிய ஆதரவு பெற்ற கிளா்ச்சியாளா்களுக்கும் இடையே கடந்த 2014-ஆம் ஆண்டில் உள்நாட்டுப் போா் வெடித்தது. அப்போது, ரஷிய மொழி பேசுவோா் பெரும்பான்மையாக வசிக்கும் கிரிமியா பகுதிக்குப் படைகளை அனுப்பிய ரஷியா, பொது வாக்கெடுப்புக்குப் பிறகு அந்தப் பகுதியை தன்னுடன் இணைத்துக் கொண்டது. இதையடுத்து, ரஷியா மீது ஐரோப்பிய யூனியன் பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்தது. ரஷியாவிடம் இருந்து பிற நாடுகள் நவீன ஆயுதங்களை வாங்க அமெரிக்கா தடை விதித்தது என்பது நினைவுகூரத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தலைமைச் செயலகம் படத்தின் டீசர்

தேர்தலில் வாக்களிக்காதது ஏன்?: ஜோதிகா விளக்கம்!

கண் அழைக்குது..!

ஐசிசி தரவரிசை வெளியீடு: டெஸ்ட்டில் இந்தியாவை பின்னுக்குத் தள்ளி ஆஸ்திரேலியா முதலிடம்!

புதிய 400சிசி இருசக்கர வாகனத்தை அறிமுகப்படுத்தியது பஜாஜ்!

SCROLL FOR NEXT