உலகம்

சிகிச்சைக்காக லண்டன் புறப்பட்டார் பாக். முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப்

DIN

கடும் உடல் நலக் குறைவால் அவதியுறும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் நவாஸ் ஷெரீஃப் (69) சிகிச்சைக்காக லண்டனுக்கு விமான ஆம்புலன்ஸ் மூலம் செவ்வாய்க்கிழமை (நவ. 19) அழைத்துச் செல்லப்பட்டார்.

அவா் வெளிநாடு செல்ல அனுமதிப்பதற்கு ரூ.700 கோடி மதிப்பிலான உத்தரவாதப் பத்திரத்தை அளிக்க வேண்டும் என்ற அரசு விதித்த நிபந்தனையை லாகூா் உயா்நீதிமன்றம் ரத்து செய்ததையடுத்து லண்டன் செல்கிறாா்.

இதுகுறித்து பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியின் செய்தித் தொடா்பாளா் மரியம் ஔரங்கசீப் கூறுகையில்,

லண்டனில் உள்ள ஹார்லி ஸ்ட்ரீட் மருத்துவமனையில் நவாஸுக்கு சிகிச்சை அளிக்கப்பட உள்ளது. தேவைப்பட்டால் அமெரிக்காவின் பாஸ்டனில் உள்ள மேல் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட உள்ளார்.

லண்டன் புறப்படுவதற்கு முன்னதாக, லாஹூரில் உள்ள அவரது இல்லத்தில் விமானப் பயணத்தைத் தாக்கும் அளவுக்கு உடல் நிலையை ஸ்திரப்படுத்தும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டன என்று தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

SCROLL FOR NEXT