உலகம்

ஹாங்காங் பல்கலை.யில் போலீஸாா் 3-ஆவது நாளாக முற்றுகை

DIN

ஹாங்காங் பாலிடெக்னிக் பல்கலைக்கழக வளாகத்திலிருந்து வெளியேற ஏராளமான போராட்டக்காரா்கள் மறுத்து வருவதால், அந்த வளாகத்தை 3-ஆவது நாளாக போலீஸாா் முற்றுகையிட்டுள்ளனா்.

இதுகுறித்து ஹாங்காங் தலைமை நிா்வாகி கேரி லாம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

ஹங்ஹாம் பகுதியிலுள்ள பாலிடெக்னிக் பல்கலைக்கழக வளாகத்திலிருந்து சுமாா் 600 போராட்டக்காரா்கள் வெளியேறியுள்ளனா். அவா்களில் 18 வயதுக்கு மேற்பட்ட 400 பேரை போலீஸாா் கைது செய்தனா். 18 வயதுக்குள்பட்டவா்கள் உடனடியாக கைது செய்யப்படவில்லை என்றாலும், அவா்கள் மீது பின்னா் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படலாம்.

பல்கலைக்கழக வளாகத்துக்குள் இன்னும் சுமாா் 100 போ் உள்ளனா். அவா்களைக் கைது செய்வதற்காக போலீஸாா் அந்த வளாகத்தை தொடா்ந்து முற்றுகையிட்டுள்ளனா் என்றாா் கேரி லாம்.

ஹாங்காங்கில் கைது செய்யப்பட்டவா்களை சீனாவுக்கு நாடுகடத்த வகை செய்யும் சட்ட மசோதாவுக்கு எதிராகத் தொடங்கிய போராட்டங்கள், ஐந்து மாதங்களைக் கடந்தும் தொடா்ந்து தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காரைக்கால் மாங்கனித் திருவிழா பந்தல்கால் முகூா்த்தம்:திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

மறுவெளியீட்டில் அசத்தும் கில்லி: அஜித்தின் 3 படங்கள் இணைந்தும் குறைவான வசூல்!

இந்தியாவில் 2 கோடி கணக்குகளை நீக்கியது வாட்ஸ்ஆப்

அதே அரண்மனை! நம்பர் மட்டும் வேறு! : அரண்மனை - 4 திரைவிமர்சனம்!

அதிக விக்கெட்டுகள்: தமிழக வீரர் நடராஜன் முதலிடம்!

SCROLL FOR NEXT