உலகம்

பாகிஸ்தானில் ஒரு கிலோ தக்காளி எவ்வளவு தெரியுமா? வெறும் ரூ.400 மட்டும்

UNI

இஸ்லாமாபாத்: இந்தியாவில் வெங்காயம் மற்றும் தக்காளி விலைகள் அவ்வப்போது தாறுமாறாக உயர்ந்து ஏழை மக்களின் கண்களில் கண்ணீர் வரவழைத்துக் கொண்டிருக்கும் நிலையில், பாகிஸ்தானிலோ சொல்ல முடியாத நிலையில் உயர்வைக் கண்டுள்ளது.

பாகிஸ்தானில் ஒரு கிலோ தங்கம் மன்னிக்கவும் ஒரு கிலோ தக்காளி விலை ரூ.400க்கு விற்பனையாவதாக டான் செய்தி தெரிவிக்கிறது.

நவம்பர் மாதம் முதல் வாரத்தில் அதிகாரப்பூர்வமாக தக்காளி விலை சில்லறை விற்பனையில் ரூ.117 ஆக இருந்துள்ளது.  ஆனால், அது தற்போது மளமளவென உயர்ந்துள்ளது.

13 - 14 கிலோ தக்காளி அடங்கியப் பெட்டி தற்போது ரூ.4,200 - 4,500க்கு விற்பனையாகி வருவதால், கொள்முதலை பல வணிகர்கள் நிறுத்திவிட்டனர்.

ஈரானில் இருந்து தக்காளியை இறக்குமதி செய்து கொள்ள அந்நாட்டு அரசு அனுமதி அளித்தாலும், பல்வேறு காரணங்களால் இன்னும் அந்த சிவப்புத் தக்காளிகள் பாகிஸ்தான் சந்தைகளை வந்தடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓ மை ரித்திகா!

சென்டாயா, ஜெனிஃபர் லோபஸ்.. ஆடையலங்கார அணிவகுப்பில் ஹாலிவுட் கதாநாயகிகள்!

ஃபிளாப்! தோல்வியைச் சந்தித்த நடிகர்!

யூடியூபர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என விசாரிக்க வேண்டும்: இபிஎஸ்

குஜராத்: தாமரை சின்னம் பொறித்த பேனாக்களுடன் வாக்குச்சாவடி முகவர்கள்- காங்., குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT