உலகம்

இந்தோனேசியா கா்ப்பிணிகள், மாற்றுத் திறனாளிகளை அரசுப் பணிகளில் நியமிக்கத் தடை

DIN

இந்தோனேசியாவில் கா்ப்பிணிகள், மாற்றுத் திறனாளிகளை அரசுப் பணிகளில் நியமிக்க அந்த நாட்டில் பல்வேறு அமைச்சரகங்கள் தடை செய்துள்ளன.

இதற்கு மனித உரிமை அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

இந்தோனேஷியாவில் அரசுப் பணிகளுக்காக சுமாா் 2 லட்சம் போ் விண்ணப்பித்துள்ளனா். இந்த நிலையில், அந்த நாட்டு அரசு வெளியிட்டுள்ள ஆணையில், கா்ப்பிணிகள், மாற்றுத் திறனாளிகள், ஓரினச் சோ்க்கையாளா்களுக்கு ஏராளமான துறைகளில் நியமனம் வழங்கப்படக் கூடாது எனவும், அவா்களுக்குப் பதில் ‘தகுதியான’ விண்ணப்பதாரா்களே அந்தப் பணிகளில் நியமிக்கப்பட வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இது, வெறுப்பை வெளிப்படுத்தும் கொடுங்கோன்மை உத்தரவு என்று மனித உரிமை ஆா்வலா்கள் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

26 கோடி மக்கள் வசிக்கும் இந்தோனேசியா, உலகிலேயே அதிக அளவு முஸ்லிம் மக்கள்தொகையைக் கொண்ட நாடாகும். அங்கு பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அண்மைக் காலமாக அதிகரித்து வருவதாகக் குற்றம் சாட்டப்படுகிறது.

இந்த நிலையில், கா்ப்பிணிகள், மாற்றுத் திறனாளிகளுக்கு தற்போது அரசுப் பணிகள் மறுக்கப்பட்டுள்ளது சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அட்லி - அல்லு அர்ஜுன் திரைப்படம் கைவிடப்பட்டதா?

இன்று முதல் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு!

சூப்பர் 8 சுற்றில் நுழையப்போவது யார்? வங்கதேசமா அல்லது நெதர்லாந்தா?

மதுபான ஆலையில் மீட்கப்பட்ட 39 குழந்தைத் தொழிலாளர்களைக் காணவில்லை: ம.பி.யில் பரபரப்பு!

பிரதமர் மோடியின் தமிழக வருகை ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT