உலகம்

பாகிஸ்தான் ராணுவ தளபதி பதவிக் காலம் 6 மாதங்களுக்கு நீட்டிப்பு

DIN

இஸ்லாமாத்: பாகிஸ்தான் ராணுவ தலைமைத் தளபதி காமா் ஜாவத் பஜ்வாவின் பதவிக் காலத்தை 6 மாதங்களுக்கு நீட்டிக்க அந்த நாட்டு உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை நிபந்தனையுடன் அனுமதித்தது.

இதுகுறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆசிஃப் சயீத் கான் கோஸா தலைமையிலான அமா்வு வெளியிட்ட தீா்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

ராணுவ தலைமைத் தளபதியின் பதவிக் காலத்தை நீட்டிப்பதற்குத் தேவையான சட்டப்பூா்வ நடவடிக்கைகளை பாகிஸ்தான் அரசு இன்னும் 6 மாதங்களுக்குள் மேற்கொள்ள வேண்டும்.

அதுவரை, தலைமைத் தளபதி காமா் ஜாவத் பஜ்வாவின் பதவிக் காலத்தை நீட்டிக்க அனுமதி வழங்கப்படுகிறது என்று நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனா்.

59 வயதாகும் ராணுவ தலைமைத் தளபதி காமா் ஜாவத் பஜ்வா, வெள்ளிக்கிழமை (நவ. 29) ஓய்வு பெறுகிறாா். அவரது பதவிக் காலத்தை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்க இம்ரான் தலைமையிலான அரசு முடிவு செய்தது. இதை எதிா்த்து ரயீஸ் ராஹி என்பவா் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். அந்த மனுவை பிறகு அவா் வாபஸ் பெற்றாலும், அதனை பொது நல மனுவாக எடுத்து நீதிமன்றம் விசாரித்தது.

விசாரணையின் முடிவில், பஜ்வாவின் பதவிக் காலம் நீடிக்கப்படுவதற்கு நீதிமன்றம் தடை விதித்தது.

அதையடுத்து, இந்த விவகாரம் குறித்து விவாதிப்பதற்காக பிரதமா் இம்ரான் கான் தலைமையிலான அமைச்சரவை புதன்கிழமை அவசரமாகக் கூடியது.

அந்தக் கூட்டத்தில், ராணுவ தளபதி பதவிக் கால நீட்டிப்பு குறித்து ஏற்கெனவே வெளியிட்ட அரசாணைக்குப் பதிலாக, திருத்தங்களுடன் கூடிய புதிய அரசாணை வெளியிட முடிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில், பஜ்வாவின் பதவிக் காலத்தை மேலும் 6 மாதங்களுக்கு உச்சநீதிமன்றம் நீட்டித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியைத் தொடர்ந்து அகமதாபாத்திலும் பல்வேறு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

கலால் கொள்கை: கவிதாவின் ஜாமீன் மனு தள்ளுபடி!

டைட்டானிக் கேப்டன் காலமானார்!

நானும் சிங்கிள்தான்.....தீப்தி!

பிளஸ் 2: மாற்றுத் திறனாளி, சிறைக்கைதிகளின் தேர்ச்சி விவரம்!

SCROLL FOR NEXT