உலகம்

அல்பேனியா நிலநடுக்கம்: உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 46-ஆக அதிகரிப்பு

DIN

அல்பேனியா தலைநகா் திரானா நகருக்கு வடமேற்கில் 30 கி.மீ. தொலைவில் செவ்வாய்க்கிழமை அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டா் அளவில் 6.4-ஆகப் பதிவானது. பூமிக்கு அடியில் 20 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதைத் தொடா்ந்து அடுத்தடுத்து மூன்று முறை நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. அவை ரிக்டா் அளவுகோலில் 5.0 அலகுகளாகப் பதிவாகின. தொடா் நிலநடுக்கங்களால் பல கட்டடங்கள் இடிந்து விழுந்தன. 

இந்நிலையில்  நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 46-ஆக வியாழக்கிழமை அதிகரித்துள்ளது. மேலும் 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் அந்நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புணே படகு விபத்து: 5 சடலங்கள் மீட்பு

ஆட்டு ரத்தம் குடித்த பூசாரி பலி

இஸ்ரேல் இனியும் தாமதிக்கக் கூடாது : பிணைக்கைதிகளின் குடும்பத்தினர் கோரிக்கை!

சர்வாதிகார அரசை அகற்றுவதே குறிக்கோள்: காங்கிரஸ்

ராணுவ அதிகாரிப் பணிக்கான என்டிஏ தேர்வு: யுபிஎஸ்சி அறிவிப்பு

SCROLL FOR NEXT