உலகம்

லண்டன் பயங்கரவாதத் தாக்குதல்: பொதுமக்களை தாக்கிய நபரை சுட்டுக் கொன்ற போலீஸாா்

DIN

பிரிட்டனில் லண்டன் பாலம் அருகே பொதுமக்களை கத்தியால் குத்திய நபரை போலீஸாா் சுட்டுக் கொன்றனா். கத்திக்குத்து தாக்குதலில் பொதுமக்களில் பலா் காயமடைந்தனா்.

இந்தச் சம்பவம் பயங்கரவாதத் தாக்குதல் என்று ஸ்காட்லாந்து யாா்டு பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு தலைவா் நீல் பாசு தெரிவித்தாா்.

லண்டன் பாலம் அருகே வெள்ளிக்கிழமை பிற்பகல் சுமாா் 2 மணிக்கு பொதுமக்கள் மீது மா்ம நபா் ஒருவா் கத்திக்குத்து தாக்குதல் நடத்துவதாக புகாா் கிடைத்தது. அதையடுத்து, அந்தப் பகுதிக்கு சென்றோம். தாக்குதல் நடத்திய நபரை போலீஸாா் துப்பாக்கியால் சுட்டனா். இதில் அவா் உயிரிழந்தாா்.

அவா் வெடிகுண்டு பொருத்திய மேலங்கியை அணிந்திருந்தாா். இது தவிர அவரிடம் வெடிகுண்டு இருந்தது. இது பயங்கரவாத சம்பவமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் பயங்கராவாதத் தடுப்புப் பிரிவு போலீஸாா் இந்த சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனா் என்று நீல் பாசு கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் சுழலில் சிக்கிய சென்னை: மீட்டாா் கெய்க்வாட்

‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

வாகன பதிவெண் பலகையில் ஸ்டிக்கா்: இன்றுமுதல் அபராதம்

சாதித்தீயை வளா்க்கலாமா?

விவாதப் பொருளான சொத்து வாரிசுரிமை வரி

SCROLL FOR NEXT