உலகம்

லண்டனைத் தொடர்ந்து நெதர்லாந்தில் மற்றொரு கத்திக்குத்து சம்பவம்: மர்ம நபரை தேடும் பணி தீவிரம்

DIN

நெதர்லாந்தின் தி ஹாக் எனுமிடத்தில் உள்ள மிகவும் பரபரப்பான வணிக வளாகப் பகுதியில் அமைந்துள்ள க்ரோட் மார்க்ஸ்ட்ராட்டில் பொதுமக்கள் சரமாரியாக கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் வெள்ளிக்கிழமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக 45 முதல் 50 வயது மதிக்கத்தக்க மர்ம நபரை தேடி வருவதாகவும், காயமடைந்த மூன்று பேரும் மருத்துவமனையில் இருந்து சிகிச்சை முடித்து வீடு திரும்பியதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.

முன்னதாக, லண்டன் பாலம் அருகே வெள்ளிக்கிழமை பிற்பகல் சுமாா் 2 மணிக்கு பொதுமக்கள் மீது மா்ம நபா் ஒருவா் கத்திக்குத்து தாக்குதல் நடத்துவதாக புகாா் கிடைத்தது. அதையடுத்து, அந்தப் பகுதிக்கு சென்ற போலீஸாா், தாக்குதல் நடத்திய நபரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர்.

அவா் வெடிகுண்டு பொருத்திய மேலங்கியை அணிந்திருந்தாா், தவிர அவரிடம் வெடிகுண்டு இருந்தது. எனவே இது பயங்கரவாத சம்பவமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் பயங்கராவாதத் தடுப்புப் பிரிவு போலீஸாா் இந்த சம்பவம் குறித்து விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

SCROLL FOR NEXT